search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை சென்டிரல்"

    சென்னை சென்டிரல்-நாகர்கோவில் இடையே அதிவேக ரெயில் வாரம் 3 முறை இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரல்-நாகர்கோவில் (12689/12690) அதிவேக எக்ஸ்பிரஸ் ரெயில் வாரம் ஒரு முறை மட்டுமே சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்பட்டு வந்தது. ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் ஒரே ரெயிலும் இதுதான். இதனால் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், கல்லூரிக்கும் செல்லும் மாணவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு இந்த ரெயில் பேருதவியாக இருக்கிறது. இந்த நிலையில் பயணிகளின் கோரிக்கையை ஏற்று தெற்கு ரெயில்வே வாரத்திற்கு 3 முறை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

    அதன்படி சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரலில் இருந்து புறப்படும் ரெயில் திருச்சிக்கு செல்லாமல் சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை வழியாக நாகர்கோவில் சென்றடையும். இதேபோல் மறுமார்க்கமாக புறப்படும் ரெயில் திருச்சி செல்லாமல் சென்னை எம்.ஜி.ஆர்.சென்டிரலுக்கு வந்தடையும். தெற்கு ரெயில்வேயின் எதிர்வரும் கால அட்டவணையில் இதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வருகிற 22-ந்தேதி சென்னை சென்டிரலில் இருந்து கோவை நோக்கி சிறப்பு கட்டண ரெயில் இயக்கப்பட இருக்கிறது.
    சென்னை:

    பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் வருகிற 22-ந்தேதி இரவு 10.30 மணிக்கு, சென்னை சென்டிரலில் இருந்து கோவை நோக்கி சிறப்பு கட்டண ரெயில் (வண்டி எண்: 06043) இயக்கப்பட இருக்கிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 6.45 மணிக்கு கோவையை சென்றடையும்.

    இந்த சிறப்பு கட்டண ரெயிலில் ஒரு மூன்றடுக்கு ஏ.சி. பெட்டி, 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 9 பொது இரண்டாம் வகுப்பு பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த ரெயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்ப்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது. #tamilnews
    ×