என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறந்த நகரங்கள்"

    • நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் முதல் இடத்தில் லண்டன் இடம்பிடித்துள்ளது.
    • கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இந்தப் பட்டியல் வெளியாகி வருகிறது.

    புதுடெல்லி:

    கனடாவை தலைமையிடமாக கொண்ட ரெசோனன்ஸ் கன்சல்டன்சி என்னும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு உலகின் சிறந்த 100 நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

    பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சுற்றுலாவின் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

    சுமார் 10 லட்சம் அல்லது அதற்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட பெரு நகரங்களை மதிப்பீடு செய்து இந்தப் பட்டியலை வெளியிடுகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து இந்தப் பட்டியல் வெளியாகி வருகிறது.

    இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான பட்டியலில் முதல் 100 இடங்களில் முதல் இடத்தில் லண்டன், 2-வது இடத்தில் நியூயார்க், 3-வது இடத்தில் பாரிஸ் நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்தியாவில் இருந்து பெங்களூரு 29-வது இடத்திலும், மும்பை 40-வது இடத்திலும், டெல்லி 54-வது இடத்திலும், ஐதராபாத் 82-வது இடத்திலும் உள்ளது.

    தொழில்நுட்ப சுற்றுச்சூழல் அமைப்பு, பெரு நிறுவன தளங்கள் விரிவுபடுத்தப்படுவது போன்றவற்றுக்காக பெங்களூரு நகரத்துக்கு இந்த அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

    • இந்தப் பட்டியலில் பாரிஸ் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
    • இதன்மூலம் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.

    லண்டன்:

    யூரோமானிட்டர் இன்டர்நேஷனல் என்னும் தரவு பகுப்பாய்வு நிறுவனம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டு உலகின் சிறந்த 100 நகரங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

    பொருளாதாரம், தொழில்துறை மற்றும் சுற்றுலாவின் செயல்பாடுகள், சுற்றுலா உள்கட்டமைப்பு, சுகாதாரம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான 100 சிறந்த நகரங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் பாரிஸ் மீண்டும் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 4-வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது.

    கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் போன்ற முக்கிய நிகழ்வுகளை நடத்தியது, சுற்றுலா சலுகைகளை வழங்கியதால் மக்களைக் கவர்ந்த நகரங்களில் பாரிஸ் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது என அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

    மேட்ரிட் 2-வது இடத்திலும், டோக்கியோ 3-வது இடத்திலும், ரோம் 4-வது இடத்திலும், மிலன் 5-வது இடத்திலும் உள்ளன.

    நியூயார்க் (6), ஆம்ஸ்டர்டாம் (7), சிட்னி (8), சிங்கப்பூர் (9), பார்சிலோனா (10) ஆகிய நகரங்கள் டாப்-10 பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்ற நாடுகளாகும்.

    இந்தியாவைப் பொறுத்தவரையில் முதல் 100 இடங்களில் தலைநகர் டெல்லி மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் டெல்லி 74-வது இடத்தில் உள்ளது. கடைசி இடத்தில் கெய்ரோ உள்ளது. ஜுஹாய் (சீனா) 99-வது இடத்திலும், ஜெருசலேம் 98-வது இடத்திலும் உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உலகில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப பூங்காக்களை கணக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
    • பெங்களூரு நகரம் புதிய தொழில்கள் தொடங்க உகந்த இடமாக திகழ்கிறது.

    பெங்களூரு:

    அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் புளும்பெர்க் நிறுவனம் உலகின் சிறந்த நகரங்கள் குறித்த ஆய்வு நடத்தியது. அதுதொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    உலகில் வளர்ந்து வரும் தொழில்நுட்ப பூங்காக்களை கணக்கீடு செய்யும் பணி நடைபெற்றது. ஆய்வில் உலகின் 6 சிறந்த நகரங்கள் பட்டியலில் கர்நாடக மாநிலம் பெங்களூரு தேர்வு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு நகரம் புதிய தொழில்கள் தொடங்க உகந்த இடமாக திகழ்கிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    ×