search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சரிதா நாயர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
    • ராகுல் காந்தியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சரிதா நாயரின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    திருவனந்தபுரம்:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. கடந்த பாராளுமன்ற தேர்தலில் இவர் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து சரிதா நாயர் போட்டியிட்டார்.

    இவர் கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கில் தொடர்புடையவர். மேலும் இது தொடர்பான 2 வழக்குகளில் 3 ஆண்டு தண்டனை பெற்றவர். எனவே இவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்தது.

    இந்நிலையில் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்தும், தனது வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டதை கண்டித்தும் சரிதா நாயர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தார்.

    இந்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் சரிதா நாயரின் வக்கீல் இதற்கு முன்பு நடந்த விசாரணையின்போது ஆஜராகாதது ஏன்? என்று விசாரித்தனர்.

    அதற்கு தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக வீடியோ கான்பரன்சிங் விசாரணையில் பங்கேற்க இயலவில்லை என சரிதா நாயர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதனை ஏற்க மறுத்த கோர்ட்டு, ராகுல் காந்தியின் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சரிதா நாயரின் மனுவை தள்ளுபடி செய்தது.

    மேலும் சரிதா நாயருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் உத்தரவில் குறிப்பிட்டு இருந்தனர்.

    • சில மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இடது கண்ணிலும் பார்வை குறைபாடு ஏற்பட்டது
    • என்னை பரிசோதித்த டாக்டர்கள் எனது ரத்தத்தில் அதிக அளவு ஆர்சனிக், பாதரசம் மற்றும் ஈயம் போன்ற ரசாயனங்கள் கலந்திருப்பதாக கூறினர்.

    திருவனந்தபுரம்:

    கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைத்து தருவதாக கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பெண் தொழில் அதிபர் சரிதா நாயர் கைது செய்யப்பட்டார்.

    10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சரிதா நாயர், அப்போதைய முதல் மந்திரி உம்மன்சாண்டி உள்பட பலர் மீதும் பாலியல் புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

    அதன்பின்பு ஜாமீனில் விடுதலையான சரிதா நாயர் அவ்வப்போது கேரள அரசியல் பிரமுகர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் கூறிவந்தார். இந்த நிலையில் சரிதா நாயர் திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    சில மாதங்களுக்கு முன்பு எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இடது கண்ணிலும் பார்வை குறைபாடு ஏற்பட்டது. முடியும் அதிகமாக கொட்டியது. இதற்காக ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றேன்.

    என்னை பரிசோதித்த டாக்டர்கள் எனது ரத்தத்தில் அதிக அளவு ஆர்சனிக், பாதரசம் மற்றும் ஈயம் போன்ற ரசாயனங்கள் கலந்திருப்பதாக கூறினர்.

    இந்த ரசாயனங்கள் விஷத்தன்மை கொண்டவை. உடலில் இவை கலந்தால் நான் மெதுவாக இறந்து விடுவேன். இதற்காகவே எனக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது. மெல்ல கொல்லும் தன்மை கொண்ட விஷம் உணவு மூலம் எனக்கு தரப்பட்டுள்ளது.

    ரத்த பரிசோதனையில் இந்த உண்மை எனக்கு தெரியவந்தது. அவ்வப்போது நான் குடிக்கும் பழச்சாறு, குளிர்பானம் மற்றும் உணவுபொருளில் இதனை கலந்து எனக்கு கொடுத்துள்ளனர்.

    இதனை யார் கலந்து கொடுத்தனர் என்பது எனக்கு தெரியாமல் இருந்தது. சமீபத்தில் நான் திருவனந்தபுரம் சென்றபோது வழியில் ஒரு கடையில் பழச்சாறு குடித்தேன். அதனை எனது டிரைவர் வினுகுமார் வாங்கி வந்து தந்தார்.

    அப்போது அவர் பழச்சாறில் எதையோ கலக்குவதை பார்த்தேன். அப்போதுதான் அவர் மீது எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் அவரை நான் பணியில் இருந்து நீக்கிவிட்டேன்.

    கடந்த 2018-ம் ஆண்டு நான் அரசியல் பிரமுகர்கள் சிலர் மீது பாலியல் புகார் கொடுத்தேன். அவர்கள் என்னை தீர்த்து கட்ட திட்டமிட்டனர். அவர்களுடன் சேர்ந்துதான் டிரைவர் வினுகுமார் இந்த செயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என கருதுகிறேன்.

    அவர் பணத்திற்காக இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதுகிறேன். எனவே எனது முன்னாள் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சரிதா நாயர் புகாரில் கூறியிருந்தார்.

    திருவனந்தபுரம் குற்றப்பிரிவு போலீசார் இந்த புகார் குறித்து விசாரணை நடத்தினர். இதில் முகாந்திரம் இருந்ததை தொடர்ந்து அவர்கள் சரிதா நாயரின் கார் டிரைவர் வினுகுமார் மீது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    சரிதா நாயரை உணவில் விஷம் கலந்து கொல்ல முயற்சி நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டு கேரளாவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தங்கம் கடத்தல் வழக்கில் ரகசிய வாக்குமூலத்தின் நகலை பெற சரிதா நாயருக்கு என்ன தேவை, அவசியம் உள்ளது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
    • ஸ்வப்னா சுரேசுக்கும், சரிதா நாயருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    பெரும்பாவூர்:

    தங்கம் கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர், முன்னாள் மந்திரி கே.டி.ஜலீல், அதிகாரிகள் மீது ஸ்வப்னா சுரேஷ் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். மேலும் அவர் எர்ணாகுளம் கோர்ட்டில் தங்கம் கடத்தல் வழக்கு தொடர்பாக ரகசிய வாக்குமூலம் அளித்தார். வழக்கில் முதல்-மந்திரிக்கு தொடர்பு இருப்பதாக கூறி பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கேரள அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்தநிலையில் சூரிய மின்தகடு ஊழல் வழக்கில் சிக்கிய சரிதா நாயர், தங்கம் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் அளித்த ரகசிய வாக்குமூலத்தின் நகல்களை தர வேண்டும் என்று எர்ணாகுளம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். அந்த வழக்கில் ஸ்வப்னா சுரேசுக்கும், சரிதா நாயருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து ரகசிய வாக்குமூலத்தில் தன்னை குறித்தும் சில கருத்துகளை ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்டு இருக்கக்கூடும் என்று கருதிய சரிதா நாயர் மீண்டும் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஐகோர்ட்டு தனி அமர்வு நீதிபதி ஷாஜி பி.சாலி விசாரித்தார். தங்கம் கடத்தல் வழக்கில் ரகசிய வாக்குமூலத்தின் நகலை பெற சரிதா நாயருக்கு என்ன தேவை, அவசியம் உள்ளது என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மேலும் வழக்கில் எந்த தொடர்பும் இல்லாத அவர் எப்படி, இந்த வாக்குமூலத்தை கோர முடியும் என்று கேட்டார். பின்னர் அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    ×