search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சதுரங்கப் போட்டி"

    • சதுரங்க போட்டியில் பல்வேறு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் கலந்து கொண்ட மாணவன் சமேரியா மேவிஸ் 2-ம் இடத்தை பிடித்தார்.

    தென்காசி:

    ஐ.பி.எல். செஸ் அகாடமி சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் ட்ரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியை சேர்ந்த மாணவன் சமேரியா மேவிஸ் 9 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் கலந்து கொண்டு 2-ம் இடத்தை பிடித்து சுழல் கோப்பை மற்றும் சான்றிதழ் பெற்றார். வெற்றி பெற்ற மாணவன் சமேரியா மேவிசை பள்ளி தாளாளர் ஷேக் செய்யது அலி, பள்ளி முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டினர்.

    • சதுரங்கப்போட்டிகள் சேலம், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.
    • தேசிய அளவில் நடைபெறும் சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்க தகுதியும் பெற்றிருக்கிறார்கள்.

    தருமபுரி,

    பெரியார் பல்கலைக் கழகக்கல்லூரிகளுக்கு இடை யேயான சதுரங்கப்போட்டிகள் சேலம், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

    சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்ட ங்களைச் சேர்ந்த 25 அணிகள் இப்போட்டிகளில் பங்கு பெற்றன. மொத்தம் ஏழு சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் தருமபுரி, தொன்போஸ்கோ கல்லூரி அணிமுதலிடம் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பை வென்றிருக்கிறது.

    இதில் முதுநிலை கணிதம் இரண்டாம் ஆண்டு மாணவர் விக்னேஷ் முதலிடம் பெற்று தனிநபர் கோப்பையை வென்றார். முதுநிலை கணிதம் இரண்டாம் ஆண்டு மாணவர் சிலம்பரசன் ஆறாவது இடத்தில் வெற்றி பெற்றார்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறும் சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்க தகுதியும் பெற்றிருக்கிறார்கள்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பேராசிரியர் சேவியர் டெனிஸ் ஆகியோரைக் கல்லூரி செயலர் எட்வின் ஜார்ஜ், முதல்வர் ஆஞ்சலோ ஜோசப், துணை முதல்வர் பாரதி பெர்னாட்ஷா, பொருளாளர் ஜான், சமூகப் பணித்துறைப் பேராசிரியர் ஆண்டனி கிஷோர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.

    • புஞ்சைபுளியம்பட்டியில் ஸ்பிரிங் டேல் பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் 5-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டி நடைபெற உள்ளது.
    • இதில் 12 ,14 ,16, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ ,மாணவிகளுக்கு தனி தனி பிரிவுகளில் போட்டி நடைபெற உள்ளது.

    பு.புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் ஸ்பிரிங் டேல் பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் 5-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) பள்ளிகளுக்கு இடையேயான சதுரங்கப் போட்டி நடைபெற உள்ளது.

    இந்த சதுரங்க போட்டியில் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ,பழனி ,திருப்பூர் ,கோவை,பல்லடம் தாராபுரம், மேட்டுப்பா ளையம்,அன்னூர் ஆகிய சி.பி.எஸ்.இ பள்ளிகளின் கூட்டமைப்பான கோவை கொங்கு சகோதயா பள்ளி காம்ப்ளக்சில் இடம்பெற்றிருக்கும் 40-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இதில் 12 ,14 ,16, 19 வயதுக்கு உட்பட்ட மாணவ ,மாணவிகளுக்கு தனி தனி பிரிவுகளில் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்பிரிங்டேல் பப்ளிக் பள்ளியின் நிர்வாக இயக்குனர் கமல், பள்ளி முதல்வர் பிரியா ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×