search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோப்புகள்"

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட கோப்புகளால் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடத்தல், கொள்ளை, கொலை உள்ளிட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடக்கிறது. இவற்றை கட்டுப்படுத்து வதிலும், ரவுடிகளை கண்காணித்து கைது செய்து குற்றங்களை தடுப்பதிலும் போலீசார் தீவிரம் காட்டு கின்றனர்.

    கடந்த 3-ந்தேதி ராமநாதபுரம் நீதி மன்றத்திற்குள் நிபந்தனை ஜாமீனில் கையெழுத்து போட்ட ரவுடியை மற்றொரு ரவுடி நீதிபதியின் இருக்கை முன்பு வெட்டிய சம்பவம் நெஞ்சை பதற வைத்தது. இவற்றையெல்லாம் பார்க்கையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றவாளி கள் ஜாலியாக உலா வருகிறார்களா? என்ற கேள்வி எழுகிறது.

    போலீசார் தரப்பில் கூறுகையில், மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 3 பேர் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு முதல் தற்போது வரை 35 பேர் மீதான குண்டர் தடுப்பு சட்ட கோப்புகள் தயார் செய்து கலெக்டரின் ஒப்பு தல் கிடைக்காமல் நிலுவை யில் உள்ளன.

    கடந்த ஆண்டு வரை மட்டும் 22 பேர் மீது குண்டாஸ் கோப்புகள் தயார் செய்யப்பட்டு அதில் 2 பேர் மட்டுமே குண்டாஸ் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.சட்டம் ஒழுங்கு பிரச்சினை வழக்கில் 11 பேர் மீதும், போக்சோ வழக்கில் ஒருவர், கஞ்சா வழக்கில் 5 பேர், திருட்டு வழக்கில் 3 பேர் என்ன 22 பேர் மீது குண்டாஸ் கோப்புகள் தயார் செய்யப்பட்டது.

    ஆனால் இதில் இருவருக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு மட்டும் சட்டம் ஒழுங்கில் 13 பேர், திருட்டு வழக்கில் 2 பேர் மீதும் போக்சோ வழக்கில் ஒருவர் என 16 பேர் மீது குண்டாஸ் கோப்பு கள் தயார் செய்யப்பட்டுள் ளது. ஆனால் இதில் ஒருவருக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

    இதையடுத்து 2022 ஜூன் முதல் இதுவரை 38 கோப்புகளில் 35 பேர் மீது குண்டாஸ் வழக்கு கோப்புகள் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் வழங்காததால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் குற்றவாளிகள் குற்றங்களை செய்துவிட்டு நிபந்தனை ஜாமீனில் உலா வருவதாகவும், குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிப்ப தாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து கலெக்டர் விஷ்ணு சந்திரன் கூறுகையில், தற்போது தான் பொறுப்பு ஏற்றுள்ளேன். அனைத்து குண்டாஸ் கோப்புகளும் கோட்டாட்சியர் விசாரணை யில் உள்ளன. மாவட்ட நிர்வாகத்திடம் 3 கோப்புகள் மட்டுமே நிலுவையில் உள்ளது என்று கூறினார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் குற்றங்களில் ஈடுபடுவோர், ரவுடிகள் மீது பதியப்படும் வழக்கு கோப்புகளை மாவட்ட நிர்வாகம் கிடப்பில் போட்டதால் குற்றவாளிகள் ஜாலியாக உலா வருகின்ற னர் என்றும், ஆகவே குண்டாஸ் வழக்கு கோப்புகள் மீது கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திட்ட பணிகள் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.
    • பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து அலுவலகக் கோப்புகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் அனைத்து கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரெங்கராஜன், வட்டாட்சியர் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாகரன், மதியரசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து அலுவலகக் கோப்புகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து பதிவறையில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலகக் கோப்புகள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் அனைத்து கோப்புகளும் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை விரைவாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின் போது உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சங்கர், ஒரத்தநாடு வட்டாட்சியர்சுரேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள்ரமேஷ், ரகுநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

    ×