search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடீஸ்வர வேட்பாளர்கள்"

    கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரின் சொத்து மதிப்பு ரூ.417 கோடி என்றும், பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ரூ.7 கோடி என்றும் வேட்புமனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #LokSabhaElections2019 #PonRadhakrishnan #HVasanthakumar
    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி தொகுதியில் 3 கோடீஸ்வர வேட்பாளர்கள் உள்ளனர்.

    பா.ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணனுக்கு மொத்தம் ரூ.7 கோடியே 49 லட்சத்து 96 ஆயிரத்து 453 சொத்து உள்ளது.

    அசையும் சொத்தாக ரூ.50 லட்சத்து 56 ஆயிரத்து 298, அசையா சொத்தாக ரூ.6 கோடியே 99 லட்சத்து 40 ஆயிரத்து 155 உள்ளது என்றும் அவர், தனது வேட்பு மனுவில் கூறி உள்ளார். மேலும் கடன் எதுவும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாருக்கு மொத்தம் ரூ.417 கோடியே 49 லட்சத்து 30 ஆயிரத்து 444 சொத்து உள்ளது.

    அசையும் சொத்துக்களாக அவரது பெயரில் ரூ.230 கோடியே 20 லட்சத்து 95 ஆயிரத்து 302-ம், அசையா சொத்துக்களாக ரூ.181 கோடி 95 லட்சம் மதிப்பில் சொத்துக்களும், பரம்பரை சொத்தாக ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகவும் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    வசந்தகுமாரின் மனைவி பெயரில் அசையும் சொத்தாக ரூ.28 லட்சத்து 35 ஆயிரத்து 142-ம், அசையா சொத்தாக ரூ.4 கோடி 75 லட்சமும் உள்ளது.

    மேலும் தனது பெயரில் வங்கி கடனாக ரூ.154 கோடியே 75 லட்சத்து 11 ஆயிரத்து 439 இருப்பதாகவும், அரசுக்கு செலுத்த வேண்டிய கடன் தொகை ரூ.11 லட்சத்து 60 ஆயிரத்து 689 இருப்பதாகவும் வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.



    மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எபினேசர் ரூ.2 கோடி சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.  #LokSabhaElections2019 #PonRadhakrishnan #HVasanthakumar
    ×