search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கைது செய்தனர்"

    • மணியனூர் பகுதியில் வெளிமாநில மது பாக்கெட்டுகள் வீட்டில் வைத்து விற்கப்பட்டது.
    • இது தொடர்பாக பெண்ணை போலீசார் கைது செய்தார்கள்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மணியனூர் பகுதியில் வெளிமாநில மது பாக்கெட்டுகளை வீட்டில் வைத்து விற்பனை செய்வதாக நல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல் பெருமாள் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தனர்.

    அங்கு, வீட்டிற்குள் மறைத்து வைத்து வெளி மாநில மது பாக்கெட்டுகள் விற்பனை செய்த, மணியனூர் முதலியார் தெருவை சேர்ந்த செல்வராஜ் மனைவி மோகனாம்பாள் (வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே போலீசாரை பார்த்ததும் செல்வராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர்கள் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த 110 வெளி மாநில மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தப்பி ஓடிய செல்வராஜை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் பண்ருட்டி தபால் நிலையம் முன்புமாவட்ட பொது செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது
    • மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்அனைவரையும் பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் கைது செய்தார்,

    கடலூர்:

    மத்தியஅரசை கண்டித்தும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 44 சட்டங்கள், 4 ஆக சுருக்கப்பட்டுள்ளதை கண்டித்தும் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் பண்ருட்டி தபால் நிலையம் முன்புமாவட்ட பொது செயலாளர் பன்னீர்செல்வம் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்அனைவரையும் பண்ருட்டி போலீஸ்இன்ஸ்பெக்டர் நந்தகுமார் கைது செய்து பண்ருட்டி திருமண மண்டபத்தில்தங்க வைத்துள்ளனர்

    • பண்ருட்டி கணிசபாக்கம் கிராமத்தில் குமார், அவரது மகன் டேவிட், மனைவி சாந்தா ஆகிய 3 பேரும் வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • அவர்களிடம் இருந்து ஏராளமான எரிசாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், (பொ) சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி கணிசபாக்கம் கிராமத்தில் குமார், அவரது மகன் டேவிட், மனைவி சாந்தா ஆகிய 3 பேரும் வீட்டின் பின்புறம் எரிசாராய பாக்கெட்டுகள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஏராளமான எரிசாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

    • சேலத்தில் ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடம் இருந்து ரேசன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை, கொண்டலாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ரேசன் அரிசி கடத்தப்படுவதாக சேலம் மாவட்ட உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் செவ்வாய்ப்பேட்டை சந்தை பேட்டை பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசாரை கண்டதும், சரக்கு ஆட்டோ ஓட்டி வந்த நபர் வாகனத்தை விட்டு அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். இதை பார்த்த போலீசார், அங்கு சென்று சரக்கு ஆட்டோவை சோதனையிட்டனர். அதில் 400 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்தது கண்ட றியப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த ஆட்டோவை ஓட்டி வந்தது பள்ளப்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 28) என்பது தெரியவந்தது.இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

     அதேபோல் ஆட்டையாம்பட்டி அருகே எஸ்.பாப்பாப்பட்டி ஏரி பகுதியில் உள்ள புதருக்குள் ரேசன் அரிசி பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர்.

    அப்போது ஆட்டை யாம்பட்டி பகுதிைய சேர்ந்த சுப்பிரமணி (49) என்பவர் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி ஏரி புதருக்குள் பதுக்கி வைத்து கோழிப்பண்ணைக்கு கடத்தி விற்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 1.1 டன் ரேசன் அரிசி பறிமுதல் செய்தனர்.

    வாழப்பாடி அருகே கஞ்சா கடத்திய‌ 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி கவர்கல்பட்டி பிரிவு சாலை அருகே, வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிவேகமாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 45 கிலோ போதைப் பொருளான கஞ்சா கடத்திச் செல்வது தெரியவந்தது.

    இதனையடுத்து, 45 கிலோ கஞ்சா ரொக்கப் பணம் ரூ. 90,000 மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    கஞ்சா கடத்தியதாக முத்தம்பட்டி சி.எஸ்.ஐ. நகர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (24), வசந்த்குமார் (27) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×