search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேப்ரியல்"

    இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டுடன் நடந்த வாக்குவாதம் குறித்து வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல் விளக்கம் அளித்துள்ளார். #WIvENG #ShannonGabriel #JoeRoot
    செயின்ட் லூசியா:

    செயின்ட் லூசியாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டின் 3-வது நாள் ஆட்டத்தின் போது வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல், சதம் அடித்து களத்தில் நின்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை ஓரின சேர்க்கையாளருடன் ஒப்பிட்டு வாக்குவாதம் செய்தது சர்ச்சையாக கிளம்பியது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) நடத்தை விதியை மீறிய அவருக்கு 4 ஒரு நாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. போட்டி கட்டணத்தில் இருந்து 75 சதவீதம் அபராதமாகவும் விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் தனது கருத்துக்காக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிடமும், அந்த அணி வீரர்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். நடந்த சம்பவம் குறித்து கேப்ரியல் கூறியதாவது:-

    நான் பயன்படுத்தியது மோசமான வார்த்தை என்பதை அறிந்து மிகவும் வருந்தினேன். உணர்ச்சி வேகத்தில் நடந்த சம்பவம் இது. இருவரிடையே நடந்த வார்த்தை பரிமாற்றம் என்ன என்பதை விளக்க வேண்டியது எனது கடமை.

    இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், நான் பந்து வீச தயாரான போது என்னை உற்று பார்த்தார். இது உளவியல் சார்ந்த யுக்தியாக இருக்கலாம். டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கு இது வழக்கமானது தான். இதை அறிந்த நான் எனக்குள் இருந்த டென்ஷனை குறைத்துக் கொள்வதற்காக அவரை நோக்கி ‘என்னை பார்த்து ஏன் சிரித்துக் கொண்டு இருக்கிறீர்கள்? ஆண்கள் என்றால் உங்களுக்கு இஷ்டமா?’ என்று கேட்டேன்.

    அதற்கு அவர், ‘இந்த சொல்லை ஒருவரை அவமதிப்பதற்காக பயன்படுத்தாதே. ஓரின சேர்க்கையாளராக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லையே’ என்று பதில் அளித்தார்.

    அதற்கு நான் ‘அது பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால் என்னை பார்த்து சிரிப்பதை நிறுத்துங்கள்’ என்று கூறினேன்.

    இந்த பிரச்சினைக்கு பிறகு நாங்கள் இருவரும் சந்தித்து பேசினோம். எங்களுக்குள் எந்த கருத்துவேறுபாடும் இல்லை. ஆனால் இந்த விவகாரம் இவ்வளவு பெரிதாகும் என்று எதிர்பார்க்கவில்லை. இது எனக்கு ஒரு அனுபவ பாடமாகும்.

    இவ்வாறு கேப்ரியல் கூறினார். #WIvENG #ShannonGabriel #JoeRoot
    ஜோ ரூட்டை பார்த்து நீங்கள் ஆண்களை விரும்புகிறீர்களா? என்று கேட்ட வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளருக்கு நான்கு போட்டியில் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஜோ ரூட் சதம் விளாசினார். ஜோ ரூட்டும், வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியலும் மைதானத்தில் அடிக்கடி மோதிக் கொண்டார்கள்.

    கேப்ரியல் வீசிய துள்ளியமான பந்து வீச்சில் இருந்து ஜோ ரூட் தப்பினார். பலமுறை இப்படி தப்பியதால் விரக்தியில் கேப்ரியல் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டார். ஆனால் ஜோ ரூட் புன்னகைத்துக் கொண்டே இருந்தார். இதனால் கோபம் அடைந்த கேப்ரியல்ஸ் ‘‘என்னை நோக்கி ஏன் சிரிக்கிறீர்கள்?. நீங்கள் ஆண்களை விரும்புகிறீர்களா?’’ என்றார்.

    அதற்கு ஜோ ரூட், ‘‘அதை அவமானப்படுத்தாதீர்கள். ஓரினச் சேர்க்கையாளராக இருப்பதில் எந்த தவறும் இல்லை’’ என்று பதில் அளித்துள்ளார். அதைப்பற்றி எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ஆனால், நீங்கள் என்னை நோக்கி சிரிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று கேப்ரியல் பதில் அளித்துள்ளார்.



    கேப்ரியல் பேசிய ஏதும் மைக் ஸ்டம்பில் பதிவாகவில்லை. ஜோ ரூட் பேசியது மைக் ஸ்டம்பில் பதிவானது. இதுகுறித்து விசாரணை நடத்திய ஐசிசி கேப்ரியலுக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. இச்சம்பவம் குறித்து கேப்ரியல் வெளியிட்டுள்ள அறிக்கையில் இப்படித்தான் இருவருக்குமிடையில் உரையாடல் நடந்தது எனத் தெரிவித்துள்ளார்.
    செயின்ட் லூசியாவில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்டில் ஜோ ரூட்டை திட்டிய வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் தண்டனையில் இருந்து தப்பித்தார்.
    வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயின்ட் லூசியாவில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் ஜோ ரூட் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 209 பந்தில் 111 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் துள்ளியமாக பந்து வீசினார். ஆனால் ஜோ ரூட் அந்த பந்துகளில் ஆட்டமிழக்காமல் தப்பினார். இதனால் விரக்தியடைந்த கேப்ரியல் ஜோ ரூட்டை பார்த்து முனுமுனுத்தார். போட்டியை பார்தத ரசிகர்களுக்கு அவர் ஏதோ திட்டினார் என்பது தெரிந்தது. ஆனால் என்ன வார்த்தை சொல்லி திட்டினார் என்பது புரியவில்லை. மேலும், மைக் ஸ்டம்பில் கேப்ரியல் பேசியது பதிவாகவில்லை.

    போட்டி முடிந்த பின்னர், ஜோ ரூட்டிடம் இதுகுறித்து கேட்டதற்கு, களத்தில் நடந்தது பற்றி கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதனால் கேப்ரியல் நடுவரின் எச்சரிக்கையுடன் தப்பினார். ஒருவேளை மைக் ஸ்டம்பில் பேச்சு பதிவாகியிருந்தால் ஐசிசி-யின் ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகியிருப்பார்.
    இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 127 ரன்னில் சுருண்டது. #INDvWI #UmeshYadav
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட இண்டீஸ் 311 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 367 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இந்தியா முதல் இன்னிங்சில் 56 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 56 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பிராத்வைட் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான பொவேல் ரன்ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார். 6 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது.

    3-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியது. 28 ரன்கள் எடுத்த நிலையில் ஹோப் ஆட்டமிழந்தார். ஹெட்மையர் 17 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 3-வது நாள் மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் உமேஷ் யாதவ் ரோஸ்டன் சேஸ் (6), டவ்ரிச் (0) ஆகியோரை க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 70 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.

    7-வது விக்கெட்டுக்கு அம்ப்ரிஸ் உடன் கேப்டன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தார். வெஸ்ட் இண்டீஸ் தேனீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்திருந்தது. அம்ப்ரிஸ் 20 ரன்னுடனும், ஹோல்டர் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.



    தேனீர் இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. இந்த ஜோடி இந்திய பந்து வீச்சாளர்களுக்கு சற்று நெருக்கடி கொடுத்தது. அந்த நேரத்தில்தான் ஹோல்டரை 19 ரன்னிலும், அம்பிரிஸை 38 ரன்னிலும் ஜடேஜா அடுத்தடுத்து வெளியேற்றினார். இந்த ஜோடி 30 ரன்கள் சேர்த்தது. இந்த ஜோடி பரிந்ததும் இந்தியா சற்று நிம்மதி அடைந்தது. அதன்பின் வந்த வாரிகனை (7) அஸ்வினும், கேப்ரியலை (1) உமேஷ் யாதவும் வெளியேற்ற வெஸ்ட் இண்டீஸ் 127 ரன்னில் சுருண்டது.

    முதல் இன்னிங்சில் 56 ரன்கள் பின்தங்கியிருந்ததால், ஓட்டுமொத்தமாக 71 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 72 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்திய உமேஷ் யாதவ் 2-வது இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி இந்த டெஸ்டில் 10 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். ஜடோஜா 3 விக்கெட்டும், அஸ்வின் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
    இந்திய பவுலர்களின் துல்லியமான பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 76 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட இண்டீஸ் 311 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஹோல்டர், கேப்ரியல் அபாரனமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். இருவரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா 367 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அஸ்வின் 35 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்தியா முதல் இன்னிங்சில் 56 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 56 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பிராத்வைட் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான பொவேல் ரன்ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.

    6 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியது. 28 ரன்கள் எடுத்த நிலையில் ஹோப் ஆட்டமிழந்தார். ஹெட்மையர் 17 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.



    3-வது நாள் மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் உமேஷ் யாதவ் ரோஸ்டன் சேஸ் (6), டவ்ரிச் (0) ஆகியோரை க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 70 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.

    7-வது விக்கெட்டுக்கு அம்ப்ரிஸ் உடன் கேப்டன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தார். வெஸ்ட் இண்டீஸ் தேனீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் 20 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

    ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் 100 ரன்கள் முன்னிலைப் பெற்றால் இந்தியாவிற்கு கடும் சவாலாக இருக்கும்.
    ஐதராபாத் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அபார வேகப்பந்து வீச்சால் இந்தியா முதல் இன்னிங்சில் 367 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட இண்டீஸ் 311 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 75 ரன்னுடனும், ரிஷப் பந்த் 85 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஹோல்டர், கேப்ரியல் அபாரனமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். ரகானே 80 ரன்கள் எடுத்த நிலையில் ஹோல்டர் பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த ஜடேஜா 2 பந்துகளை சந்தித்த நிலையில் ஹோல்டர் பந்தில் ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றி ஹோல்டர் இந்தியாவின் ரன்குவிப்பிற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.



    அதன்பின் வந்த குல்தீப் யாதவ் 6 ரன்னில் ஆட்டமிழக்க, சதத்தை நெருங்கிய ரிஷப் பந்த் 92 ரன்னில் வெளியேறினார். இந்தியா இன்று காலையில் 31 ரன்கள் எடுப்பதற்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது.

    கடைசி விக்கெட்டுக்கு அஸ்வின் உடன் காயம் அடைந்துள்ள ஷர்துல் தாகூர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 28 ரன்கள் சேர்க்க இந்தியா 367 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அஸ்வின் 35 ரன்கள் சேர்த்தார். ஷர்துல் தாகூர் 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்தியா இன்று காலை 59 ரன்களுக்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது குறிப்பிடத்தக்கது.
    ×