search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சு- வெஸ்ட் இண்டீஸ் 76-க்குள் 6 விக்கெட்டை இழந்து திணறல்
    X

    இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சு- வெஸ்ட் இண்டீஸ் 76-க்குள் 6 விக்கெட்டை இழந்து திணறல்

    இந்திய பவுலர்களின் துல்லியமான பந்து வீச்சால் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 76 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்துள்ளது. #INDvWI
    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட இண்டீஸ் 311 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் எடுத்திருந்தது.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான ஹோல்டர், கேப்ரியல் அபாரனமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார்கள். இருவரின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா 367 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அஸ்வின் 35 ரன்கள் சேர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் ஹோல்டர் 5 விக்கெட்டும், கேப்ரியல் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இந்தியா முதல் இன்னிங்சில் 56 ரன்கள் முன்னிலைப் பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 56 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் பிராத்வைட் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான பொவேல் ரன்ஏதும் எடுக்காமல் அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.

    6 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு ஷாய் ஹோப் உடன் ஹெட்மையர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடியது. 28 ரன்கள் எடுத்த நிலையில் ஹோப் ஆட்டமிழந்தார். ஹெட்மையர் 17 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.



    3-வது நாள் மதிய உணவு இடைவேளைக்கு சற்றுமுன் உமேஷ் யாதவ் ரோஸ்டன் சேஸ் (6), டவ்ரிச் (0) ஆகியோரை க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் 70 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்தது.

    7-வது விக்கெட்டுக்கு அம்ப்ரிஸ் உடன் கேப்டன் ஹோல்டர் ஜோடி சேர்ந்தார். வெஸ்ட் இண்டீஸ் தேனீர் இடைவேளை வரை 6 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் 20 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது. உமேஷ் யாதவ் மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

    ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் 100 ரன்கள் முன்னிலைப் பெற்றால் இந்தியாவிற்கு கடும் சவாலாக இருக்கும்.
    Next Story
    ×