search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குக்"

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்டிலும் இந்திய அணி தோல்வியடைந்ததால், 4-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை வென்றது. #ENGvIND #OvalTest
    ஓவல்:

    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு 464 ரன்கள் இலக்காக இங்கிலாந்து நிர்ணயித்தது. இதனை அடுத்து, களமிறங்கிய இந்திய அணியில் தவான் (1), புஜாரா (0), விராட் கோலி (0)  அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால் இந்தியா 2 ரன்னிற்குள் 3 விக்கெட்டை இழந்தது. 

    5-ம் நாள் ஆட்டம் இன்று தொடங்கிய நிலையில், ரஹானே சிறிது நேரம் நிலைத்து நின்று விளையாடி 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய விஹாரி 0 ரன்களில் அவுட் ஆனார். திடீர் திருப்பமாக, ராகுல் - பந்த் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

    ராகுல் தனது சதத்தை பதிவு செய்ய அவருக்கு பக்க பலமாக பந்த் நிதானமாக விளையாடினார். ரஷித் பந்தில் ராகுல் 149 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறாவிட்டாலும் டிரா செய்து விடும் என்று நினைத்த நிலையில், ராகுல் அவுட் ஆனது ஏமாற்றமளித்தது.

    சிறப்பாக விளையாடி முதல் சதத்தை பதிவு செய்த பந்த், 114 ரன்களில் அவுட் ஆனார். பின்னர் இறங்கிய ஜடேஜா, இஷாந்த், சமி ஆகியோரும் சொற்ப ரன்களில் அவுட் ஆக, 345 ரன்களுக்கு இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணியை ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இரண்டாவது இன்னிங்சில் சதமடித்த இங்கிலாந்து வீரர் குக், இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். 
    ×