search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5th test match"

    இங்கிலாந்து அணியின் தொடக்க வீரரான குக் இன்றைய ஆட்டத்தில் 30 ரன்கள் எடுத்தால் சங்ககராவை (இலங்கை) முந்தி டெஸ்டில் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் 5-வது இடத்தை பிடிப்பார். #ENGvIND #AlastairCook
    இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் குக். தொடக்க வீரரான அவர் இந்தியாவுக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 5-வது டெஸ்டோடு ஓய்வு பெறபோவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

    முதல் இன்னிங்சில் குக் அபாரமாக விளையாடி 71 ரன் எடுத்தார். 2-வது இன்னிங்சில் நேற்று அவர் 46 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

    குக் 12,371 ரன்களுடன் உள்ளார். இன்றைய ஆட்டத்தில் அவர் மேலும் 30 ரன் எடுத்தால் சங்ககராவை (இலங்கை) முந்தி டெஸ்டில் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் 5-வது இடத்தை பிடிப்பார். சங்ககரா 12,400 ரன்களுடன் உள்ளார்.



    தெண்டுல்கர் 15,921 ரன்களுடன் முதல் இடத்திலும், பாண்டிங் 13,378 ரன்களுடன் 2-வது இடத்திலும், காலிஸ் 13,289 ரன்களுடன் 3-வது இடத்திலும், டிராவிட் 13,288 ரன்களுடன் 4-வது இடத்திலும் உள்ளனர். #ENGvIND #AlastairCook
    இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் ஜடேஜா பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு தனது திறமையை வெளிபடுத்தி உள்ளார். #ENGvIND #Jadeja
    லண்டன்:

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 332 ரன் குவித்து 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 174 ரன் எடுத்து இருந்தது.

    நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 292 ரன் எடுத்து ‘ஆல்அவுட்’ ஆனது. இது இங்கிலாந்தின் ஸ்கோரைவிட 40 ரன் குறைவாகும்.

    ரவிந்திரஜடேஜா 86 ரன்னும், புதுமுக வீரர் ஹனுமா விஹாரி 56 ரன்னும் எடுத்தனர். ஆண்டர்சன், பென்ஸ்டோக்ஸ், மொய்ன்அலி தலா 2 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட், ஆதில் ரஷீத், குர்ரான் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    40 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன் எடுத்து இருந்தது. அந்த அணி தற்போது 154 ரன் முன்னிலை பெற்றுள்ளது. கைவசம் 8 விக்கெட் இருக்கிறது.

    இந்த டெஸ்டில் ரவிந்திர ஜடேஜா ஏற்கனவே பந்து வீச்சில் சாதித்து இருந்தார். அவர் 4 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதேபோல பேட்டிங்கிலும் ஜடேஜா முத்திரை பதித்தார்.



    8-வது வீரராக களம் இறங்கிய அவர் 80 ரன்கள் எடுத்து இந்திய அணியை சரிவில் இருந்து மீட்டார். அவர் 156 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரி, 1 சிக்சருடன் இந்த ரன்னை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேலும் இங்கிலாந்தின் 2-வது இன்னிங்சில் 1 விக்கெட் கைப்பற்றினார்.

    ஆல்ரவுண்டர் வரிசையில் ஜடேஜா இந்த டெஸ்டில் சிறப்பாக செயல்பட்டார். முதல் 4 டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த டெஸ்டில் கிடைத்த வாய்ப்பை ஜடேஜா பயன்படுத்தி தனது திறமையை வெளிப்படுத்தினார். #ENGvIND #Jadeja
    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. #ENGvIND #INDvENG
    லண்டன்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித்தொடரில் முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 3-வது டெஸ்டில் இந்தியா 203 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    சவுதம்டனில் நடந்த 4-வது டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை (7-ந்தேதி) தொடங்குகிறது.

    டெஸ்ட் தொடரை இழந்ததால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் கடைசி டெஸ்டில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் கடைசி டெஸ்டில் வெற்றியுடன் நாடு திரும்ப வேண்டும் என்ற வேட்கையில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

    பேட்டிங்கில் கேப்டன் விராட்கோலி, புஜாரா, ரகானே ஆகியோர் மட்டுமே நல்ல நிலையில் உள்ளனர். இதில் கோலி மிகவும் நிலையாக ஆடுகிறார்.

    இதனால் நாளைய டெஸ்ட் போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கலாம். ஹர்த்திக் பாண்ட்யா இடத்தில் புதுமுக வீரர் ஷிகாரி இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் டெஸ்டில் அறிமுகமாக வாய்ப்பு இருக்கிறது.

    இதேபோல காயம் அடைந்த அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா இடம் பெறலாம். மேலும் அஸ்வின் கடந்த டெஸ்டில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. லோகேஷ் ராகுல் ஒருவேளை நீக்கப்பட்டால் பிரித்விஷா இடம் பெறலாம்.

    இந்தியாவின் பந்துவீச்சு நன்றாக இருக்கிறது. பேட்டிங் தான் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. இதனால் அதில் மேம்பட்டால் மட்டுமே இங்கிலாந்தை வீழ்த்த இயலும்.

    இங்கிலாந்து அணி இந்த டெஸ்டிலும் இந்தியாவை வீழ்த்தி 4-1 என்ற கணக்கில் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

    இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க வீரருமான குக் இந்த டெஸ்டோடு ஓய்வு பெறுகிறார். அவரது கடைசி டெஸ்டில் வெற்றியை பெற்றுக்கொடுக்கும் ஆர்வத்தில் இங்கிலாந்து உள்ளது.

    33 வயதாக குக் டெஸ்டில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர் ஆவார். அவர் 160 டெஸ்டில் விளையாடி 12,254 ரன்களை எடுத்துள்ளார். 32 சதமும், 56 அரைசதமும் அடங்கும். சராசரி 44.88 ஆகும். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 294 ரன்கள் குவித்துள்ளார். #ENGvIND #INDvENG
    ×