என் மலர்

  செய்திகள்

  இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்குமா? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்
  X

  இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா பதிலடி கொடுக்குமா? கடைசி டெஸ்ட் நாளை தொடக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. #ENGvIND #INDvENG
  லண்டன்:

  விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

  இரு அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டித்தொடரில் முதல் டெஸ்டில் 31 ரன் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 3-வது டெஸ்டில் இந்தியா 203 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  சவுதம்டனில் நடந்த 4-வது டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

  இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை (7-ந்தேதி) தொடங்குகிறது.

  டெஸ்ட் தொடரை இழந்ததால் இந்திய அணி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் கடைசி டெஸ்டில் வென்று இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும் கடைசி டெஸ்டில் வெற்றியுடன் நாடு திரும்ப வேண்டும் என்ற வேட்கையில் இந்திய வீரர்கள் உள்ளனர்.

  பேட்டிங்கில் கேப்டன் விராட்கோலி, புஜாரா, ரகானே ஆகியோர் மட்டுமே நல்ல நிலையில் உள்ளனர். இதில் கோலி மிகவும் நிலையாக ஆடுகிறார்.

  இதனால் நாளைய டெஸ்ட் போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கலாம். ஹர்த்திக் பாண்ட்யா இடத்தில் புதுமுக வீரர் ஷிகாரி இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் டெஸ்டில் அறிமுகமாக வாய்ப்பு இருக்கிறது.

  இதேபோல காயம் அடைந்த அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா இடம் பெறலாம். மேலும் அஸ்வின் கடந்த டெஸ்டில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. லோகேஷ் ராகுல் ஒருவேளை நீக்கப்பட்டால் பிரித்விஷா இடம் பெறலாம்.

  இந்தியாவின் பந்துவீச்சு நன்றாக இருக்கிறது. பேட்டிங் தான் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது. இதனால் அதில் மேம்பட்டால் மட்டுமே இங்கிலாந்தை வீழ்த்த இயலும்.

  இங்கிலாந்து அணி இந்த டெஸ்டிலும் இந்தியாவை வீழ்த்தி 4-1 என்ற கணக்கில் தொடரை வெல்லும் ஆர்வத்துடன் உள்ளது.

  இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும், தொடக்க வீரருமான குக் இந்த டெஸ்டோடு ஓய்வு பெறுகிறார். அவரது கடைசி டெஸ்டில் வெற்றியை பெற்றுக்கொடுக்கும் ஆர்வத்தில் இங்கிலாந்து உள்ளது.

  33 வயதாக குக் டெஸ்டில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர் ஆவார். அவர் 160 டெஸ்டில் விளையாடி 12,254 ரன்களை எடுத்துள்ளார். 32 சதமும், 56 அரைசதமும் அடங்கும். சராசரி 44.88 ஆகும். அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 294 ரன்கள் குவித்துள்ளார். #ENGvIND #INDvENG
  Next Story
  ×