என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் மோதி படுகாயம்"

    • பைக்கை கார் சிறிது தூரம் இழுத்துச் சென்றது
    • 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் அனுமதி

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த திமிரியில் மெக்கானிக்காக வேலை செய்து வருபவர் பாஸ்கர் (வயது 30). இவர் நேற்று காலை ஆற்காடு பைபாஸ் சாலை பஸ் நிறுத்தத்தில் ஒரமாக மோட் டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அதன் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த அரசு கார் அவர் மீது மோதியது. இதில் பாஸ்கர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். கட்டுப்பாட்டை இழந்த கார், பாஸ்கரின் மோட்டார்சைக்கிளை சிறிது தூரம் இழுத்துச் சென்று நின்றது.

    படுகாயமடைந்த பாஸ்கரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    • நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலைய குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறார்.
    • சம்பவத்தன்று இரவு எதிரே அதிவேகமாக வந்த கார் பயங்கரமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப் - இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் சண்முகம் (வயது 50).

    இவர் தற்போது நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டி போலீஸ் நிலைய குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு ஜேடர்பாளையத்திற்கு பணிக்கு செல்வதற்காக தனது மோட்டார்சைக்கிளில் வேலகவுண்டம்பட்டியில் இருந்து நருவலூர் செல்லும் சாலையில் அணியார் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே அதிவேகமாக வந்த கார் பயங்கரமாக மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார்.

    சிகிச்சை

    இதை பார்த்த அவ்வழியாக வந்தவர்கள் அவரை காப்பாற்றி நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து வேலகவுண்டம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து சப்- இன்ஸ்பெக்டர் சண்முகம் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள சிலுவம்பட்டி, ரெட்டியார் தெருவை் சேர்ந்த கார் டிரைவர் சேகர் (38) என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி இவரது மகன் சிவா (வயது21) இவர் நேற்று தனது வீட்டு தோட்டத்தை பராமரித்துக் கொண்டிருந்தார்.

    விஷ பாம்பு ஒன்று அவரை கடித்தது உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு தனது பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மண்டலவாடி கூட்ரோடு அருகே சென்ற போது திருப்பத்தூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த கார் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சிவா படுகாயமடைந்தார்.

    உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து அவரது சகோதரர் விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த வினோத் (35). என்பவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×