search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கரூர் கோர்ட்"

    செக் மோசடி வழக்கு தொடர்பாக நடிகர் நெப்போலியனுக்கு கரூர் கோர்ட்டு பிடிவாரண்டு அனுப்பியுள்ளது. #ActorNapoleon
    கரூர்:

    கரூர் காமராஜபுரம் வடக்கு பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (வயது 44). நிதி நிறுவனம் நடத்தி வரும் இவர் நடிகர் கவுதம் கார்த்திக், நெப்போலியன் ஆகியோர் நடித்த முத்துராமலிங்கம் என்ற திரைப்படத்திற்காக ரூ.1 கோடியே 10 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.

    இந்த நிலையில் அந்த படம் வெளியானபோது, ரூ.53 லட்சத்து 54 ஆயிரத்தை கோபால கிருஷ்ணனுக்கு திருப்பி செலுத்த வேண்டிய சூழல் இருந்தது. அப்போது நெப்போலியன் அந்த பணத்திற்கு பொறுப்பேற்று தருவதாக கூறியுள்ளார்.

    பின்னர் ரூ.25 லட்சத்தை திருப்பி செலுத்தினார். மீதமுள்ள ரூ.28 லட்சத்து 54 ஆயிரத்திற்கான காசோலையை, கோபாலகிருஷ்ணனுக்கு கொடுத்திருந்தார். ஆனால் சம்பந்தப்பட்ட வங்கியில் அந்த காசோலை பணம் இல்லாமல் திரும்பியது.

    இதனால் ஏமாற்றமடைந்த கோபாலகிருஷ்ணன், இதுதொடர்பாக நெப்போலியன் மீது, கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் விரைவு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணைக்காக 5 முறைக்கு மேல் நெப்போலியனுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. தற்போது அவர் அமெரிக்காவில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ரகோத்தமன், வழக்கில் ஆஜராகாத நெப்போலியனுக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார். வழக்கு விசாரணையை மே மாதம் 31-ந்தேதிக்கும் ஒத்திவைத்தார்.

    இதனிடையே வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி நெப்போலியன் தரப்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை தள்ளுபடி செய்து கோர்ட்டு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. #ActorNapoleon
    பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கில், நடிகர் எஸ்.வி.சேகர் கரூர் கோர்ட்டில் 20-ந் தேதி ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். #svsekar
    கரூர்:

    பா.ஜ.க. பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் சமூக வலைத்தளத்தில் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறான கருத்துகளை பதிவிட்டார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின.

    இது சம்பந்தமாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

    பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்ட எஸ்.வி.சேகர் மீது கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்திய குடியரசு கட்சியின் மாநில அமைப்பாளர் தலித் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கு தொடர்பாக நடிகர் எஸ்.வி.சேகர் நேற்று கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். ஆனால் நேற்று எஸ்.வி.சேகர் கோர்ட்டுக்கு வரவில்லை.

    அவருக்கு பதில் அவரது வக்கீல் செந்தில்குமார் வந்தார். அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா, வருகிற 20-ந் தேதி எஸ்.வி.சேகர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார். இல்லை என்றால் பிடிவாரண்டு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். #svsekar
    ×