search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கருவூட்டல்"

    • 40-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் நிகழ்வு நடந்தது.
    • முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முரளிதரன் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கம் சீர்காழி இணைந்து சீர்காழிக்கு அருகில் உள்ள சாந்தப்புத்தூர் கிராமத்தில் மயிலாடுதுறை கால்நடை பராமரிப்பு துறை சார்பாக 40க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு செயற்கை முறையில் கருவூட்டல் நிகழ்வு மற்றும் கால்நடைகளுக்கு அனைத்து வகையான மருத்துவ பரிசோதனை, விலையில்லா அனைத்து வகை மருந்துகளும் கால்நடை உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கம் சீர்காழி டெம்பிள் டவுன் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

    மாவட்ட உதவி ஆளுநர் கணேஷ், ரோட்டரி சங்கம் சீர்காழி டெம்பிள் டவுன் செயலர் ரவி, பொருளாளர் சந்தோஷ், முன்னாள் செயலர்கள் குமார், பிரபாகரன், முன்னாள் தலைவர் வைத்தியநாதன், ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக சீர்காழி சுபம் வித்யா மந்திர் பள்ளியின் தாளாளர் சுதீஷ் ஜெயின் கலந்து கொண்டார்.

    கால்நடை மருத்துவர்கள் டாக்டர்.ரமாபிரபா, டாக்டர்.கார்த்திகேயன் , கால்நடை ஆய்வாளர் ராஜீ, கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் எம்.ராஜா, எம்.மாலதி ஆகியோர்கள் கலந்துகொண்டு அனைத்து கால்நடைகளுக்கு மருத்துவ பணியினை ஆற்றினர். நிகழ்வில் சுபம் வித்யா மந்திர் பள்ளியின் முதல்வர் கே.வித்யா, பள்ளி நிர்வாக அலுவலர் சி.சண்முகம், மற்றும் அனைத்து பகுதியிலிருந்தும் கிராம மக்கள், 30க்கும் மேற்பட்ட நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் சபாநாயக முதலியார் இந்து மேனிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியரும், நாட்டு நலப் பணித்திட்ட அலுவலருமான முரளிதரன் ,நன்றி கூறினார்.

    • ஒரு கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலையமும், ஒரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவும் செயல்பட்டு வருகின்றன.
    • 14 ஊராட்சி ஒன்றியங்களில் 280 முகாம்கள் நடைபெறுகிறது.

     கடலூர்:

    கடலூர் ஊராட்சி ஒன்றியம் குணமங்கலம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது . இதனை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து சிறந்த கால்நடைகளுக்கு பரிசும், முன்னோடி விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.கடலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புதுறையின் கீழ் ஒரு கால்நடை பெரு மருத்துவமனையும், 5 கால்நடை மருத்துவமனையும், 92 கால்நடை மருந்தகங்களும், 56 கால்நடை கிளை நிலையங்களும், ஒரு நடமாடும் கால் நடை மருந்தகமும், ஒரு கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலையமும், ஒரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவும் செயல்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 3,53,663 மாடுகளும், 6,031 எருமை மாடுகளும், 42,675 செம்மறியாடுகளும், 3,41,587 வெள்ளாடுகளும், 9,50,457 கோழிகளும், 8,280 பன்றிகளும் விவசாயயிகளால் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    அவற்றினை பாதுகாத்தல், பெருக்குதல் மற்றும் வருவாய் ஈட்டும் நோக்கத்துடன் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 280 முகாம்கள் நடைபெறுகிறது.  மேலும், இம்முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி, குடற்புழு நீக்கம் செய்தல், சினை பரிசோதனை, மலட்டு நீக்க சிகிச்சை, தாது உப்பு கலவை வழங்குதல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி போடுதல் மற்றும் சிறு அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாய பெருமக்கள் இச்சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமில் தங்கள் கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டார்.  இந்நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) மோகன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    ×