search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்சிக்கொடி"

    • முக்கிய இடங்களில் கட்சி கொடியேற்றி மதுக்கூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • தொழிலதிபர்கள், பெரியோர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா மதுக்கூரில் சிவசேனா மாநில துணைத்தலைவர், காவி புலிப்படை நிறுவனத் தலைவர் மற்றும் தமிழக இந்து பரிவார் மாநில அமைப்பாளரு மான புலவஞ்சி சி. பி. போஸ் பிறந்த நாளை முன்னிட்டு கட்சி கொடி ஏற்றி, தென்னங்கன்றுகள் பொதும க்களுக்கு வழங்கப்பட்டது.

    மதுக்கூரில் நேற்று முன்தினம் 23ஆம் தேதி சிவசேனா மாநில துணைத்தலைவர், காவி புலிப்படை நிறுவனத் தலைவர் மற்றும் தமிழக இந்து பரிவார் மாநில அமைப்பாளருமான புலவஞ்சி சி. பி. போஸ் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு புலவஞ்சி, மதுக்கூர் பேருந்து நிலையம், முக்ககூட்டுச்சாலையில் உள்ள ஒரு வழி பாதையில் ,ஆற்று பாலம் என முக்கிய இடங்களில் கட்சி கொடியேற்றி மதுக்கூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது .

    இதனை அடுத்து மதுக்கூர் அருகே படப்பை காட்டில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிவசேனா மாநில அமைப்பாளர் தங்க முத்துகிருஷ்ணன், இந்து சத்திய சேனா நிறுவனத் தலைவர் மாஸ்டர் M.வசந்தகுமார், இந்து அதிரடிப்படை நிறுவன தலைவர் ராஜகுரு ,பி.ஜே.பி. ன் எஸ்.சி. எஸ்.டி. அணியின் மாநில செயலாளர் பெரம்பலூர் பிச்சை, சிவசேனாவின் தஞ்சை மாவட்ட தலைவர் ஆசைத்தம்பி ,பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் கார்த்திக், மதுக்கூர் ஒன்றிய விவசாய அணி தலைவர் ஆனந்தராஜ் ,மதுக்கூர் ஒன்றிய தலைவர் பிரபாகரன், மதுக்கூர் நகர தலைவர் அன்பு மற்றும் தொழிலதிபர்கள், பெரியோர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இதனை முன்னிட்டு அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டது.

    • தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.
    • கட்சிக்கொடிக்கம்பங்கள் அனைத்தும் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் தினேஷ்குமார் தலைமையில், ஆணையாளர் கிராந்திகுமார் பாடி முன்னிலையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் கலந்துகொண்டனர்.திருப்பூர் மாநகர பகுதியில் கட்சிக்கொடிக்கம்பங்கள் அனைத்தும் கோர்ட்டு உத்தரவுப்படி அகற்றப்பட்டது.

    ஆனால் மீண்டும் நடுவதாக புகார் எழுந்துள்ளது. கொடிக்கம்பங்களை கட்சியினர் அகற்றாவிட்டால் மாநகராட்சி சார்பில் அவை அகற்றப்படும். சாலையின் மையத்தடுப்பில் கட்சிக்கொடிகள் கட்டக்கூடாது. ரவுண்டானா பகுதியில் விளம்பர பதாகைகளை வைக்கக்கூடாது. போக்குவரத்துக்கு இடையூறாக பதாகைகள் வைக்கக்கூடாது. வாக்காளர் அட்டையுடன், ஆதார் எண் இணைக்கும் பணிக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அனைத்துக்கட்சியினரிடம் வலியுறுத்தப்பட்டது.

    ×