search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒரே தேர்தல்"

    • ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை என்று மாணிக்கம்தாகூர் எம்.பி. பேட்டியளித்தார்.
    • பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தல் முதல், பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் வரை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியமே இல்லை.

    விருதுநகர்

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் நிறைவடைந்து ஓராண்டு ஆகியுள்ளது. இதையொட்டி சிவகாசியில் காங்கிரஸ் சார்பில் ஊர்வலம் நடந்தது.

    இதில் மாணிக்கம்தாகூர் எம்.பி., அசோகன் எம்.எல்.ஏ., மாவட்ட தலை வர்கள் ராஜாசொக்கர். ரங்கசாமி, மாநகர் தலைவர் சேர்மத்துரை, மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, மாவட்ட செய்தி தொடர்பா ளர் மீனாட்சிசுந்தரம், கவுன்சிலர் ரவிசங்கர், ஜீ.பி.முருகன், முன்னாள் கவுன்சிலர் கணேசன், வட்டார தலைவர் பைபாஸ் வைரகுமார், ஷேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகாசி காமராஜர் சிலையில் இருந்து நகரின் முக்கிய வீதிகள் வழியா காங்கிரஸ் கட்சியினர் நடைபயணம் சென்றனர்.

    பின்னர் மாணிக்கம் தாகூர் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராகுல்காந்தி நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு புதிய திசையை கொடுத்தது. அதை போலவே இந்தியாவுக்கும் புதிய அரசியலை கொடுத்துள்ளது.

    இந்த அரசியல் மாற்றம் என்பது கடந்த ஆண்டு செப்.7-ந்தேதி தொடங்கி யது. இதை கொண்டாடும் வகையில் இந்தியா முழுவதும் 900 இடங்களில் இந்த நடைபயணம் நடக்கி றது. இந்தியாவில் உள்ள அனைத்து மதத்தினரையும் காங்கிரஸ் கட்சி மதிக்கிறது. பா.ஜ.க. மதஅடிப்படையில் விவாதம் செய்கிறது. இந்தியா என்பது பாரதத்தை தான் குறிக்கிறது. ஆனால் வேண்டும் என்றே பா.ஜ.க. இதனை விவாதமாக்கி வருகிறது.

    எதிர்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்த போதே பா.ஜ.க.வுக்கு பயம் வந்துவிட்டது. இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் குறித்து தேர்தல் காலத்தில் உரிய முறையில் அறிவிக்கப்படும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை.

    பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் தேர்தல் முதல், பாராளுமன்ற உறுப்பினர் தேர்தல் வரை ஒரே நேரத்தில் நடத்த சாத்தியமே இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒரே நாடு ஒரே தேர்தல் அறிவிப்பை கண்டு தி.மு.க.வினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
    • முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பொதுக்கூட்டத்தில் பேசினார்.

    விருதுநகர்

    எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாளையொட்டி விருதுநகா் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் விருதுநகர் பாண்டியன் நகர் எம்.ஜி.ஆர். திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் விஜயகுமரன் தலைமை தாங்கினார்.

    விருதுநகர் நகர செயலாளர் நைனார் முகமது, சிவகாசி வடக்கு ஒன்றிய செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, விருதுநகர் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.கே.கண்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம, விருதுநகர் வடக்கு ஒன்றிய செயலாளர் மச்சராஜா, விருதுநகர் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் முத்துலட்சுமி, மாவட்ட கவுன்சிலர் நாகராஜ், விருதுநகர் கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் பாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் கருப்பசாமி, ராமலட்சுமி, ராஜம்மாள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் அமைப்புச் செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர்-முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு பேசியதாவது:-

    குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் தருவோம் என்று கூறினார்கள். சிலிண்டர் மானியம் தருவோம் என்று கூறினார்கள், 2 வருடமாக எதுவுமே செய்யவில்லை. பொய் சொல்லியே ஓட்டு வாங்கி விட்டனர். உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை எடுத்துக்கொண்டு ஓட்டு கேட்டு வந்தார். அந்த செங்கலின் விலை தற்போது 12 ரூபாய் உயர்ந்து விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு செங்கல் ரூ.5 மட்டுமே விற்பனை செய்யப்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சியில் 12 ரூபாய்க்கு சென்று விட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் 300 ரூபாய்க்கு விற்பனை செய்த சிமெண்ட் விலை இன்றைக்கு 600 ரூபாய்க்கு மேல் சென்றுவிட்டது. கம்பி விலைகள் அனைத்தும் கூடிவிட்டன. 10 லட்ச ரூபாய்க்கு வீடு கட்ட நினைத்தால் கூட அதன் செலவு தற்போது விலைவாசி உயர்வு காரணமாக 20 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. எல்லா விலையும் உயர்ந்து விட்டது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் கூட ஆகாத நிலையில் எல்லா விலையும் ஏற்றி விட்டனர்.

    தற்போது ஒரே நாடு ஒரே தேர்தல் அறிவிப்பை கண்டு தி.மு.க. அரசு அதிருப்தி அடைந்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்பட்டால் தமிழகத்தில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தல் வரும். தமிழகத்தில் சரியான ஆளுநர் கிடைத்துள்ளார். ஆளுநருக்கும் தி.மு.க.வுக்கும் சரியான போட்டி நடக்கிறது. தி.மு.க.வினரால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. இவர்கள் என்ன செய்தாலும் கடைசியாக ஆளுநரிடம் சென்று கையெழுத்து வாங்க வேண்டி உள்ளது. சட்டசபையில் ஆளுநரை கடுமையாக விமர்சித்து விட்டு கையெழுத்து வாங்க மட்டும் கவர்னர் மாளிகைக்கு ஏன் செல்கின்றனர்?

    மத்திய அமைச்சர்களை விமர்சனம் செய்வது இந்திய பிரதமரை விமர்சனம் செய்வது ஆளுநரை விமர்சனம் செய்வது ஆளுநரை ஒருமையில் பேசுவது, கடைசியில் அவர்களிடமே சென்ற கையெழுத்து கேட்பது திட்டங்களுக்கு நிதி கேட்பது. எப்படி தமிழகத்திற்கு நல்லது நடக்கும். ஏதாவது பரபரப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே தி.மு.க.வினர் எதையாவது செய்கின்றனர்.

    தற்போது சேதுசமுத்திர திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். ஒன்றுமே கிடைக்கவில்லை என்றால் ஏதாவது ஒன்றை கையில் எடுத்துக் கொள்கின்றனர். 2 ஏக்கர் நிலம் தருகின்றோம் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி மக்களை ஏமாற்றி வாக்கு சேகரித்தார். கடைசியில் 2 ஏக்கர் நிலம் கொடுக்கவே இல்லை. வருகிற பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரவுள்ளது. மக்கள் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×