search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்பந்த பணியாளர்கள்"

    • தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • போராட்டம் காரணமாக இது வரை ஊதியம் வழங்க வில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவ மனை செயல்பட்டு வரு கிறது. இங்கு தூய்மை பணி, காவலர், ஹவுஸ் கீப்பிங் ஆகிய பணிகளில் தனியார் நிறுவனம் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் வேலை செய்து வரு கிறார்கள்.

    இவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த குறைந்த பட்ச ஊதியம் வழங்க வேண்டும். மேலும் வார விடுமுறை சூழற்சி முறையில் வழங்க வேண்டும். ஒப்பந்த முறை ப்படி 3 சிப்ட் வழங்க வேண்டும்.

    பெண் ஊழியர்களுக்கு இரவு பணி வழங்க கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கடந்த 6-ந் முதல் தமிழக மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் தொடங்கி நடந்து வருகிறது.

    அவர்கள் நேற்று 3-வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் சங்கத்தினர் இன்று (வெள்ளிக்கிழமை) 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது குறித்து சங்க நிர்வாகிகள் கூறியதாவது:

    நாங்கள் கோரிக்கைகள் வலியுறுத்தி இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். மருத்துவமனை டீன் எங்களி டம் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர் பேசும் போது, தனி யார் நிறுவனம் தான் உங்களின் கோரிக்கை ஏற்க வேண்டும் என தெரிவி த்தனர்.

    மேலும் மாதம் தோறும் 7-ந் தேதி எங்களுக்கு ஊதியம் வழங்கப்படும். ஆனால் போராட்டம் காரணமாக இது வரை ஊதியம் வழங்க வில்லை. போராட்டம் கைவிட பல அழுத்தம் கொடுக்க ப்படுகிறது. கோரிக்கைகள் நிறை வேறும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.

    • ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கல்லூரி மருத்துவமனைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராடி வருகின்றனர்.

    பெருந்துறை:

    பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களை தனியார் நிறுவனம் ஒன்று தினக்கூலி அடிப்படையில் இவர்களை பணியில் அமர்த்தி உள்ளது.

    கடந்த 3 ஆண்டுகளாக இவர்களுக்கு சராசரி தினக்கூலியாக ரூ.490 என்ற அடிப்படையில் கூலிக்கு அமர்த்தியுள்ளனர். ஆனால் தற்போது வரை ரூ.360 மட்டுமே வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

    மேலும் இவர்களுக்கு வருடம் ஒருமுறை வழங்கக்கூடிய ஊதிய உயர்வு, போனஸ் மற்றும் தூய்மை பணியாளர் னளுக்கான உபகரணங்கள் எதுவும் வழங்கப்பட வில்லை.

    இதனை கண்டித்து நேற்று மாலை முதல் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலையை புறக்கணித்து கல்லூரி மருத்துவமனைக்குள் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி போராடி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று 2-வது நாளாக ஒப்பந்த பணியாளர்கள் மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.

    • தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் சங்க மண்டல பேரவை கூட்டம் நடைபெற்றது.
    • துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

    விழுப்புரம்:

    தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய (ஆர்.சி. எச்) துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் சங்க மண்டல பேரவை கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார், மாநிலத் துணைத் தலைவர் நிலா ஒளி, மாநில பொருளாளர் ராஜலட்சுமி, மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் பழனிமுத்து வரவேற்புரை யாற்றினார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் முன்னாள் மாநில பிரச்சார செயலாளர் சிவகுரு, தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கவிஞர் சிங்காரம் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மாதம் ரூ..1500 மட்டுமே வழங்கி, வரும் இன்றைய காலச் சூழ்நிலையில் குடும்பம் நடத்த முடியாத அவல நிலையில் உள்ளனர். அரசு விதிப்படி 8 மணி நேர வேலை, வார விடுமுறை, அரசு விடுமுறை, இலவச சீருடை, இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.விழுப்புரம் கள்ளக்குறிச்சி கடலூர் மாவட்டச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×