search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏரிகள் நிரம்பியது"

    • சிறப்பு பூஜை செய்து கிராம மக்கள் வழிபாடு
    • உபரி நீரை மலர் தூவி வரவேற்றனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக ஏரி மற்றும் குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருவது. நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

    அதன்படி பள்ளிகொண்டா அருகே உள்ள இறைவன்காடு மற்றும் கந்தனேரி ஆகிய 2 ஏரிகள் முழுவதுமாக நிரம்பி இன்று காலை கோடிப்போனது.

    இதனால் மகிழ்ச்சி அடைந்த ஊர் பொதுமக்கள் ஏரி நிரம்பி வழியும் இடத்தில் ஒன்றுகூடி சிறப்பு பூஜை செய்து வழிபாடு நடத்தினர். மேலும் மதகின் வழியே வெளியேறும் உபரி நீரை மலர் தூவி வரவேற்றனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் கலந்து கொண்டு, மலர் தூவி வரவேற்றார். இதில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு, தி.மு.க ஒன்றிய செயலா ளர்கள் குமாரபாண்டியன், வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • மலர்கள் தூவி, இனிப்பு கொடுத்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை அதிக அளவில் கால்வாய் மூலம் தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் தண்ணீராலும் தொடர்ந்து குடியாத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏரிகள் தொடர்ந்து நிரம்பி வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான நெல்லூர்பேட்டை பெரிய ஏரி என்கிற செருவங்கி ஏரி நேற்று முன்தினம் இரவு நிரம்பி வழிந்தது.

    இதேபோல் செட்டிகுப்பம் ஓட்டேரியும் கடந்த சில தினங்களாக நிரம்பி வழிகிறது. ஏரி நிரம்பி வழியும் பகுதியில் குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம் மலர்கள் தூவி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.கார்த்திகேயன், எஸ். சாந்தி, குடியாத்தம் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் நத்தம்பிரதீஷ், செட்டிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.இந்திரா, ஒன்றிய குழு உறுப்பினர்கள் சி. மலர்வேணி, செல்விபாபு உட்பட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஏரி பாசன சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மலர் தூவி வரவேற்பு
    • மேளதாளத்துடன் ஊர்வலம் நடந்தது

    திருப்பத்தூர்:

    கந்திலி ஒன்றியத்தில்250 ஏக்கர் பரப்பளவில் உள்ள குனிச்சி, லக்கிநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பி தண்ணீர் வழிந்து வருகிறது.

    இதனை ஒட்டி அந்த பகுதி பொதுமக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து ஆடு வெட்டி பூஜை செய்து மழை தூவ நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் சாந்தகுமார் தலைமை வகித்தார் சி.என். அண்ணாதுரை எம்.பி, நல்லதம்பி எம்.எல்.ஏ., பூஜை செய்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

    நிகழ்ச்சியில் ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் கே. ஏ. குணசேகரன், முருகேசன், கே. எஸ். ஏ. மோகன்ராஜ், ஒன்றிய குழு தலைவர் திருமதி திருமுருகன் துணைத்தலைவர் ஜி.மோகன் குமார் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    ஏரிகள் நிரம்பியதற்காக ஆடு வட்ட பொதுமக்கள் முயன்றபோது ஆடுகளை வெட்டக்கூடாது எம்பி எம்எல்ஏ தடுத்தனர். அவர்கள் சென்றவுடன் ஆடு வெட்டி பொதுமக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.

    • தண்ணீரில் மலர் தூவி எம்.எல்.ஏ. வரவேற்பு
    • மோர்தானா அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை கடந்த 6 மாதங்களுக்கு மேலாக நிரம்பி உள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீர் அதிகரித்து உள்ளதால் மோர்தானா அணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஜிட்டப்பல்லி செக்டேமிலிருந்து வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் வழியாக குடியாத்தம் மற்றும் கே.வி. குப்பம் பகுதிகளில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் சென்று கொண்டுள்ளது.

    ஏரிகளுக்கு கால்வாய்கள் மூலம் செல்லும் தண்ணீர் தொடர்ந்து சென்றதால் குடியாத்தம் ஒன்றியத்தில் உள்ள 3 ஏரிகள் நிரம்பியது.

    முழுவதும் வறண்டு இருந்த அக்ராவரம் ஏரி மோர்தானா கால்வாய் கிடு கிடுவென நிரம்பி நேற்று காலையில் வழிந்து ஓடியது சுமார் 63 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த அக்ராவரம் ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்து வருவதை தொடர்ந்து குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. பூஜை செய்து பூக்கள் தூவி தண்ணீரை வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.கார்த்திகேயன், ஒன்றிய குழு உறுப்பினர் மனோகரன், ஊராட்சி மன்ற தலைவர் முனிசாமி, துணைத்தலைவர் தமிழரசிஇளையராஜா உள்பட ஏராளமானோர் உடன் இருந்தனர்.

    இதேபோல் சுமார் 30 ஏக்கர் பரப்பளவு உள்ள பெரும்பாடி ஏரியும் நேற்று நிரம்பி வழிந்தது. இதேபோல் 55 ஏக்கர் பரப்பளவு கொண்ட எர்த்தாங்கல் ஏரி நிரம்பி வழிவதற்கு சிறிது உயரமே இருந்தது.

    இந்நிலையில் தொடர்ந்து மோர் தானா கால்வாய் வழியாக வரும் தண்ணீரும் மழை தண்ணீரும் ஏரிக்கு வந்ததால் கடந்த இரண்டு நாட்களாக எர்த்தாங்கல் ஏரியும் சிறிதளவு வழிந்து வருகிறது.

    வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் ஒன்றியத்தில் 3 ஏரிகள் நிரம்பி வழிந்து வருவதால் விவசாயிகளும் கிராம மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் ஏரியிலிருந்து வழிந்து ஓடும் தண்ணீர் முறையாக வெளியேற ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் ஏரிக்கு வரும் கால்வாய்களும் ஏரியிலிருந்து வெளியேறும் கால்வாய்களும் ஆக்கிரமிப்பு இல்லாமல் சீர் செய்ய வேண்டும் எனவும் விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×