search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உள்கட்டமைப்பு"

    • புது டெல்லியில் ஒரு சந்திப்பில் நிதின் கட்கரி உரையாற்றினார்
    • சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்நிறுவனங்கள் விலையை ஏற்றுகின்றன

    இந்தியாவின் ஆளும் பா.ஜ.க. அரசாங்கத்தின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருப்பவர் நிதின் கட்கரி (66).

    இந்திய தலைநகர் புது டெல்லியில், "க்ரிசில் இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் கான்க்லேவ் 2023" எனும் இந்தியாவின் உள்கட்டமைப்பில் பங்கு பெறும் நிறுவனங்களுக்கான ஒரு சந்திப்பில் அவர் உரையாற்றினார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது;

    அரசாங்கம் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை ஊக்குவித்தாலும் உள்கட்டமைப்பு அமைப்பதில் பங்கு பெறும் நிறுவனங்கள் தற்போதைய தொழில்நுட்பங்களுக்கு மாற தயங்குகின்றன. இதனால் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தனது திட்டங்களுக்கு டிபிஆர் எனும் 'விரிவான திட்ட அறிக்கைகள்' (Detailed Project Reports) தயாரிக்க மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றன. இது மட்டுமின்றி சிமெண்ட் மற்றும் எக்கு தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்குள் 'ரகசிய கூட்டமைப்பு' ஒன்றை உருவாக்கி விலை குறையாமல் பார்த்து கொள்கின்றன. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அந்நிறுவனங்கள் விலையை ஏற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளன. நிலையின்றி அடிக்கடி உயரும் விலையினால் டிபிஆர் உருவாக்குவது மிக கடினமாக உள்ளது. எங்குமே ஒரு முழுமையான டிபிஆர் உருவாக்கப்படுவதில்லை. தயாரிக்கப்படும் திட்ட அறிக்கைகளிலும் பல தவறுகள் இடம்பெறுகின்றன. சரக்கு போக்குவரத்திற்கான செலவினங்கள் இந்தியாவில் 14லிருந்து 16 சதவீதம் உள்ளது. ஆனால் சீனாவில் 8லிருந்து 10 சதவீத அளவிலேயே உள்ளது. இதனால் திட்டங்களுக்கான செலவுகள் வரையறுக்கப்பட்டதை விட அதிகமாகி விடுகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×