என் மலர்
நீங்கள் தேடியது "உன்னதி ஹூடா"
- ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடைபெற்றது.
- பெண்கள் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வென்றார்.
கட்டாக்:
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான ஈஷாராணி பரூவா உடன் மோதினார்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-17, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
- ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடந்து வருகிறது.
- பெண்கள் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.
கட்டாக்:
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான தஸ்னீம் மிர் உடன் மோதினர்.
முதல் செட்டை 18-21 என இழந்தார் உன்னதி ஹூடா. இதனால் சுதாரித்துக் கொண்ட் அவர் அடுத்த இரு செட்களை 21-16, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
இறுதிப்போட்டியில் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனை ஈஷாராணி பரூவா உடன் மோதுகிறார்.
இதேபோல் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் கிரண் ஜார்ஜ் முன்னேறியுள்ளார்.
- ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடந்து வருகிறது.
- பெண்கள் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.
கட்டாக்:
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான அனுபமா உபாத்யாயா உடன் மோதினர்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-16, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடந்து வருகிறது.
- பெண்கள் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.
கட்டாக்:
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, தாய்லாந்தின் டிடாரோன் கிளிபைசன் உடன் மோதினர்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-7, 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்தப் போட்டி 25 நிமிடங்களில் முடிவடைந்தது.
- ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் கட்டாக்கில் நடந்து வருகிறது.
- பெண்கள் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.
கட்டாக்:
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் ஒடிசா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் நடந்து வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, ஐக்கிய அரபு எமிரேட்சின் பிரகிருதி பாரத் உடன் மோதினர்.
தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-12, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தான்வி சர்மா 21-8, 17-21, 21-18 என ஜப்பானின் அனா இவாகியை வீழ்த்தினார்.
- சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனையான ரக்ஷிதா ராம்ராஜ் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய உன்னதி ஹூடா 21-15, 13-21, 21-16 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் தன்வி ஷர்மா 21-13, 21-19 என்ற செட் கணக்கில் ஹாங்காங் வீராங்கனையான லோ சின் யானை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உ.பி.யின் லக்னோவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா வெற்றி பெற்றார்.
லக்னோ:
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, சக நாட்டு வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய உன்னதி ஹூடா 21-13, 21-18 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ரக்ஷிதா ராம்ராஜ் 21-12, 21-14 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனையான ஷ்ரேயா லீலேவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் உன்னதி ஹுடா அரையிறுதியில் தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹுடா, இந்தோனேசியாவின் புத்ரி குசுமா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய இந்தோனேசிய வீராங்கனை 21-7, 21-13 என்ற செட் கணக்கில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இதன்மூலம் இந்தியாவின் உன்னதி ஹுடா தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் உன்னதி ஹுடா அரையிறுதிக்கு முன்னேறினார்.
பெர்லின்:
ஹைலோ ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் உன்னதி ஹுடா, சீன தைபேயின் லின் சியாங் டியை உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய உன்னதி ஹுடா 22-20, 21-13 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா, ஜப்பானின் யமகுச்சி உடன் மோதினார்.
- இந்திய வீராங்கனையை 21-16, 21-12 என்ற கணக்கில் வீழ்த்தி யமகுச்சி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா, ஜப்பானின் யமகுச்சி உடன் மோதினார்.
இதில் இந்திய வீராங்கனையை 21-16, 21-12 என்ற கணக்கில் வீழ்த்தி யமகுச்சி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, சக நாட்டு வீராங்கனை உன்னதி ஹூடா உடன் மோதினார்.
- இதில் முதல் செட்டை ஹூடாவும் 2 செட்டை பிவி சிந்துவும் கைப்பற்றினர்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து, சக நாட்டு வீராங்கனை உன்னதி ஹூடா உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை ஹூடாவும் 2 செட்டை பிவி சிந்துவும் கைப்பற்றினர். வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி செட்டை ஹூடா கைப்பற்றினார்.
இதனால் ஹூடா 21-16, 19-21, 21-13 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
- சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் நடந்து வருகிறது.
- இதில் இந்தியாவின் உன்னதி ஹூடா முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
பீஜிங்:
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் உன்னதி ஹூடா, ஸ்காட்லாந்தின் கிர்ஸ்டி கில்மோர் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய உன்னதி ஹூடா 21-11, 21-16 என எளிதில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இரண்டாவது சுற்றில் உன்னதி ஹூடா, பி.வி.சிந்துவை எதிர்கொள்கிறார்.






