search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உடல்கள் மீட்பு"

    • 6 பேர் விடுமுறையை களிப்பதற்காக மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சி உப்புபள்ளம் பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.
    • பவானி ஆற்றில் குளிக்க செல்பவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் ஜீவானந்தம்(வயது16). இவரது நண்பர் உப்பிலிபாளையத்தை சேர்ந்த கவுதம்(16).

    ஜீவானந்தம், கவுதம் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் என மொத்தம் 6 பேர் விடுமுறையை களிப்பதற்காக மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சி உப்புபள்ளம் பவானி ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.

    அங்கு அவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்தனர். அப்போது ஆற்றில் திடீரென தண்ணீர் வரத்து அதிகரித்தது.

    தண்ணீர் வரத்து அதிகரித்ததை பார்த்த மாணவர்கள் 4 பேர், நீந்தி கரைக்கு வந்து விட்டனர். ஜீவானந்தமும், கவுதமும் தண்ணீரில் சிக்கி தத்தளிக்க தொடங்கினர்.

    இதை பார்த்த அவரது நண்பர்கள் அலறி சத்தம் போட்டனர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்து மாணவர்களை மீட்கும் முயற்சியில் இறங்கினர்.

    மேலும் இதுகுறித்து தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று 2-வது நாளாக தேடும் பணி நடந்தது. நேற்று இரவை தாண்டியும் மீட்பு பணி நடந்தது. ஆனால் உடல் மீட்கப்படவில்லை.

    இன்று 3-வது நாளாக வருவாய்த்துறையினர், தீயணைப்பு துறையினர் உள்ளிட்டோர் ஆற்றில் மூழ்கிய மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இன்று காலை மேட்டுப்பாளையம் சாமனா பம்ப் அவுஸ் பகுதியில் இறந்த நிலையில் ஜீவானந்தம், கவுதம் ஆகியோரின் உடல்களை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

    பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    தொடர்ந்து வச்சினாம்பாளையம் பம்ப் அவுஸ் பகுதியில் நீரில் மூழ்கிய சகுந்தலா என்ற பெண்ணை தேடும் பணி 3-வது நாளாக நடக்கிறது.

    மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் குளிக்க செல்பவர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்படுவது வாடிக்கையாகி வருகிறது.

    இதனை தடுக்க பவானி ஆற்றங்கரையோரங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக உபகரணங்களுடன் கூடிய லைப் கார்டு ஆம்புலன்சு சேவை தொடங்கப்பட்டுள்ளது.இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் ெதாடங்கி வைத்தார்.

    இந்த ஆம்புலன்சில் ஒரு சப்-இன்ஸ்பெக்டர், 10 காவலர்கள் எப்போதும் பணியில் இருப்பார்கள். யாராவது ஆற்றில் சிக்கியதாக தகவல் வந்தால், உடனே இந்த குழுவினர் சென்று மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி. பாலாஜி, இன்ஸ்பெக்டர்கள் நவநீதகிருஷ்ணன்(மேட்டுப்பாளையம்), குமார்(காரமடை), வேளாங்கண்ணி உதயரேகா(சிறுமுைக), ஊராட்சி தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×