search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இருக்கன்குடி மாரியம்மன் கோவில்"

    • இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டு பால், பன்னீர்புஷ்பம், தேன், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே தென் தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

    இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் பல்வேறு வாகனங்களிலும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து மாவிளக்கு, அக்கினிச்சட்டி, பறக்கும் காவடி, தேர் இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்துவர்.

    இந்த ஆண்டு ஆடி கடைசி வெள்ளி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று கடைசி வெள்ளியை முன்னிட்டு கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் சாத்தூரிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.

    இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு பால், பன்னீர்புஷ்பம், தேன், ஜவ்வாது உள்ளிட்ட 16 வகை திவ்ய பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அலங்காரம் செய்து சிறப்பு பூஜை தொடங்கியது.

    இதன் பின்னர் சின்னமாரியம்மன் கோவிலில் இருந்து உற்சவர் அம்மன் இன்று மதியம் 2 மணிக்கு ரிஷப வாகனத்தில் வீதி உலா வந்து அர்ச்சுனா ஆற்றை கடந்து சந்நதி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களின் வசதிக்காக மருத்துவ வசதிக்காக சுகாதார மையங்கள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை செய்துள்ளனர். கோவிலில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான (பொறுப்பு) வளர்மதி, பரம்பரை அறங்காவலர் தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

    • இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.3.22 கோடியில் குடியிருப்பு வளாகம் கட்டும் பணியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
    • பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ரூ.3.22 கோடி மதிப்பீட்டில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு குடியிருப்பு வளாகம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    இதில் சாத்தூர் ஒன்றிய சேர்மன் நிர்மலா கடற்கரை ராஜ், சாத்தூர் ஒன்றிய செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்துகொண்டு குத்து விளக்கேற்றினர். இருக்கன்குடி பஞ்சாயத்து தலைவர் செந்தாமரை, கோவில் நிர்வாக அலுவலர் கருணாகரன், பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர் குழு பூசாரிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கோவில் வளாகத்தில் உபயதாரர் நிதி ரூ.43.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட உள்துறை அலுவலகம், பாதுகாப்பு அறை மற்றும் வாகன மண்டபம் ஆகியவற்றை சேர்மன் மற்றும் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தனர்.

    ×