search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இசாந்த் ஷர்மா"

    12-வது ஐபிஎல் சீசனில்தான் சொந்த மைதான அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது என்று இசாந்த் ஷர்மா தெரிவித்துள்ளார். #IPL2019
    இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் இசாந்த் ஷர்மா. டெல்லியைச் சேர்ந்த இவர் பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் விளையாடியவர். ஐபிஎல் தொடரில் இவர் டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடியுள்ளார்.

    தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம்பிடித்துள்ளார். டெல்லி அணி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டுள்ளது. சிறு வயதில் இருந்தே விளையாடிய மைதானத்திற்கு சொந்தமான அணியில் முதன்முறையாக விளையாட இருப்பதை இசாந்த் ஷர்மா ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

    இதுகுறித்து இசாந்த் ஷர்மா கூறுகையில் ‘‘எனக்கு மற்ற மைதானதங்களை விட பெரோஸ் ஷா கோட்லா மைதானம் சிறப்பு வாய்ந்தது. 17 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் இருந்தே இங்கேதான் விளையாடி வருகிறேன். என்னுடைய எல்லாப் போட்டிகளிலும் இங்கேதான் விளையாடியுள்ளேன். இங்கு எனக்கு ஏராளமான நினைவுகள் உண்டு.



    எனக்கு மட்டுமல்ல, டெல்லியில் இருந்து கிரிக்கெட் வீரர்களாக வந்துள்ள அனைவருக்கும், பெரோஸ் ஷா கோட்லா மைதானம் குறித்த நினைவுகள் இருக்கும். ஏனென்றால், எல்லோரும் இங்கிருந்துதான் அவர்களது கிரிக்கெட்டை தொடங்கியிருப்பார்கள். இங்கிருந்துதான் நாங்கள் இந்திய அணிக்கு விளையாடுவதற்கு சென்றோம்.

    12 வருடத்திற்குப் பிறகு சொந்த மைதானத்திற்குரிய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை நான் மிகப்பெரிய கவுரவமாக நினைக்கிறேன். என்னுடைய சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்த முயற்சி செய்வேன். இந்த வருடம் டெல்லி கேப்பிட்டல்ஸ் சாம்பியன் பட்டம் வெல்லும் என்ற நம்புகிறேன்’’ என்றார்.
    மெல்போர்ன் டெஸ்டில் 137 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இந்திய பந்து வீச்சாளர்களை ஆஸி. கேப்டன் வெகுவாக பாராட்டியுள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் மெல்போர்னில் நடைபெற்றது. இதில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றி பெற்றது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை இந்தியா 151 ரன்னில் சுருட்டியது.

    இந்நிலையில் தோல்வி குறித்து ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் கூறுகையில் ‘‘பெர்த் டெஸ்டில் நாங்கள் சில முன்னேற்றங்கள் அடைந்தோம். ஆனால் மொல்போர்னில் ஏமாற்றமே மிஞ்சியது. நாங்கள் சில உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடிக் கொண்டிருக்கிறோம். சிட்னி தொடருக்கு முன் சில நேர்மறையான வழிகளைத் தேட வேண்டியது அவசியமானது.

    எங்களுக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. பேட்டிங் ஆர்டர் குறித்து சிறு ஆலோசனை நடத்த வேண்டியுள்ளது. ஆனால் சிட்னி சீதோஷ்ண நிலை முற்றிலும் மாறுபட்டது. ஆகவே, நாங்கள் சிறந்த பார்முலாவை முடிவு செய்ய வேண்டும். மெல்போர்ன் பிட்ச் குறித்து சிலர் குறை கூறுகிறார்கள். ஆனால் மெல்போர்ன் ஆடுகளம் சிறப்பானதுதான்.

    இந்தத் தொடரில் கம்மின்ஸ் சிறப்பாக பந்து வீசி வருகிறார். அவரது பந்து வீச்சு எப்போதும் தரமாகத்தான் இருக்கும். ஆனால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அவருடைய முயற்சியை பார்க்க வேண்டும். அவரைப்போன்று மற்ற பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும்’’ என்றார்.
    எசக்ஸ் அணிக்கெதிரான 2-வது இன்னிங்சிலும் இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளார். #ENGvIND #Dhawan
    இந்தியா - எசக்ஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் செல்ம்ஸ்போர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 395 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. முரளி விஜய், விராட் கோலி, கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அரைசதம் அடித்தார்கள்.

    அதேவேளையில் ஷிகர் தவான் டக்அவுட் ஆகியும், புஜாரா 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்கள்.

    பின்னர் எசக்ஸ் அணி முதல இன்னிங்சை தொடங்கியது உமேஷ் யாதவ் (4), இசாந்த் ஷர்மா (3) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் எசக்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.



    பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் இன்னிங்சில் முதல் பந்திலேயே டக்அவுட் ஆன தவான், இந்த இன்னிங்சில் 3 பந்துகள் சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

    இரண்டு இன்னிங்சிலும் ஒரு ரன்கூட அடிக்க முடியாமல் தவான் ஏமாற்றம் அளித்துள்ளார். புஜாரா 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
    ×