என் மலர்

  செய்திகள்

  பயிற்சி ஆட்டம்- 2-வது இன்னிங்சிலும் தவான் டக்அவுட், எசக்ஸ் 359/8 டிக்ளேர்
  X

  பயிற்சி ஆட்டம்- 2-வது இன்னிங்சிலும் தவான் டக்அவுட், எசக்ஸ் 359/8 டிக்ளேர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எசக்ஸ் அணிக்கெதிரான 2-வது இன்னிங்சிலும் இந்திய தொடக்க வீரர் ஷிகர் தவான் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளார். #ENGvIND #Dhawan
  இந்தியா - எசக்ஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் செல்ம்ஸ்போர்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 395 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது. முரளி விஜய், விராட் கோலி, கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா ஆகியோர் அரைசதம் அடித்தார்கள்.

  அதேவேளையில் ஷிகர் தவான் டக்அவுட் ஆகியும், புஜாரா 1 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்கள்.

  பின்னர் எசக்ஸ் அணி முதல இன்னிங்சை தொடங்கியது உமேஷ் யாதவ் (4), இசாந்த் ஷர்மா (3) ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் எசக்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 359 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.  பின்னர் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக லோகேஷ் ராகுல், தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். முதல் இன்னிங்சில் முதல் பந்திலேயே டக்அவுட் ஆன தவான், இந்த இன்னிங்சில் 3 பந்துகள் சந்தித்து ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.

  இரண்டு இன்னிங்சிலும் ஒரு ரன்கூட அடிக்க முடியாமல் தவான் ஏமாற்றம் அளித்துள்ளார். புஜாரா 23 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
  Next Story
  ×