search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதார் எண் இணைக்கும் பணி"

    • நாளை முதல் 2 நாட்கள் நடக்கிறது
    • 1300 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம்

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

    வேலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதி கமில் 1300 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஆதார் எண் விவரங்களை படிவம்-6 பி-ல் வாக்காளர்களின் சுயவிருப்பத்தின் அடிப்படையில் பெற்று வருகின்றனர்.

    இந்த பணியில் போதிய முன்னேற்றம் காணப்படாததால் பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைப்பதற்கு வசதியாக நாளை சனிக்கிழமை மற்றும் 26-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று ஆதார் எண் இணைப்பு படிவம் பெற உள்ளனர்.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு, தங்களது ஆதார் எண் விவரத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளித்து, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம் 2 நாட்கள் நடக்கிறது.
    • www.voterportal.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், நேரடியாக ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.

    மதுரை

    மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அனீஷ்சேகர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்பட்டியலை செம்மைப்படுத்தும் நோக்கத்தில் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி 1.8.2022 முதல் நடந்து வருகிறது. வாக்காளர்கள் விரும்பும்பட்சத்தில் தங்களது ஆதார் எண்ணைகீழ்க்கண்ட வழிமுறைகளில் வாக்காளர் பட்டியலுடன் நேரடியாக இணைத்துக்கொள்ளலாம்.

    அதற்காக www.nvsp.in என்றஇணை யதளம் மூலமாகவும், Voter Helpline கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்தும், www.voterportal.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், நேரடியாக ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம். மேலும் இந்த பணிக்காக அனைத்து வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் இதர தேர்தல் பணியாளர்கள் வாக்கா ளர்களின் இல்லங்க ளுக்கு நேரடியாக சென்று ஆதார் எண்ணைபெற்று இதற்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட படிவம் 68 அல்லது கருடா கைப்பேசி செயலி மூலமாக இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

    மேலும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிக்கான சிறப்பு முகாம் வாக்காளர்கள் பயன்பெறும் வகையில் நாளை(4-ந் தேதி) மற்றும் 5-ந் தேதி ஆகிய 2 தினங்கள் காலை 10 மணிமுதல்மாலை 5 மணி வரை சம்மந்தப்பட்டவாக்குச் சாவடி மையங்களில் நடைபெறஉள்ளது.

    பொதுமக்கள் தங்களது ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைஎண் விபர ங்களுடன் தொடர்பு டைய வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று வாக்குச்சாவடி நிலைஅலுவலரிடம் படிவம் 6பி பூர்த்தி செய்தோ அல்லது இணையவழியிலோ வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 1,258 வாக்குச்சாவடி மையங்களில் நடந்தது
    • கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நிர்ணயிக்கப்பட்ட 1,258 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் சிறப்பு முகாம்

    முகாமில் வாக்காளர்களிடம் படிவம் 6பி அளித்து தங்களின் ஆதார் விவரங்களை வாக்காளர் அடையாள அட்டையுடன் சுய விருப்பத்தின் பேரில் இணைத்து கொண்டனர்.

    திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை கலெக்டரும், தேர்தல் அலுவலருமான முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறுகையில்:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 20 லட்சத்து 66 ஆயிரத்து 264 ஆகும். இதுவரை 7 லட்சத்து 88 ஆயிரத்து 965 வாக்காளர்கள் தங்களது ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்து உள்ளனர்.

    இது 38 சதவீதம் ஆகும். மீதம் உள்ள வாக்காளர்களின் ஆதார் எண் விவரங்களையும் வாக்காளர் அட்டையுடன் இணைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றார்.

    ×