search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் சொந்தில் பாலாஜி"

    • இதயவியல் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.
    • அமைச்சர் செந்தில் பாலாஜி உடலில் பல்வேறு உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார்.

    சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

    அவர் அடிக்கடி வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தூக்கம் இல்லாத காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளாகியும் இருந்தார். மனரீதியாகவும் அவர் பாதிக்கப்பட்டதால் உடல் எடையும் குறைந்தது.

    இதனால் கடந்த 15-ந்தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் இதயவியல் பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார்.

    அங்கு அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்த்ததில் கணையத்தில் கொழுப்புக் கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அதற்கு சிகிச்சை பெற வேண்டி உள்ளதால் இன்னும் சில நாட்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பார் என தெரிகிறது.

    இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அதில், அமைச்சர் செந்தில் பாலாஜி உடலில் பல்வேறு உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார். ரத்த பரிசோதனை, எக்கோ, எச்ஆர்சிடி சோதனை, வயிற்றுக்கான யுஎஸ்ஜி சோதனை, கழுத்து வலி மற்றும் முதுகெலும்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதேபோல், வயிற்று வலிக்கான சோதனை, எம்ஆர்சிபி, மூளைக்கான எம்ஆர்ஐ, எம்ஆர்வி, எம்ஆர்ஏ உள்ளிட்ட பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

    மூளைக்கான எம்ஆர்ஐ பரிசோதனையில் வலது புறத்தில் க்ரோனிக் லக்யுனே இன்ஃபார்ட் கண்டறியப்பட்டுள்ளது.

    முழு முதுகெலும்புகளிலும் அசாதாரண நிலை கண்டறியப்பட்டது. முதுகெலும்பில் வீக்கம் காணப்படுகிறது.

    எம்ஆர்சிபி சோதனையில் பித்தப்பையில் பல பாலிப்கள், பித்தப்பை கற்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இது நாளடைவில் உணவு உட்கொள்வதை குறைக்கும் என்றும் இதனால் உடல்நிலை பாதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் அவர் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். செந்தில் பாலாஜியின் இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் கால்சிய படிவ அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால் ரத்த கொழுப்பை அதிகப்படுத்தி மாரடைப்பு ஏற்படும்.

    உரிய மருந்துகளை முறையாக எடுக்கவில்லை என்றால் மூச்சுத்திணறல், சிறுநீரக செயலிழப்பு, கணைய அழற்சி, ரத்த கசிவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும்.

    செந்தில் பாலாஜியின் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் சில பிரச்சனைகள் கண்டறியப்பட்டுள்ளன. அதற்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றால், அவர் கோமா நிலைக்கு செல்லும் அபாயமும் உள்ளது.

    இதனால், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலைக்கு உரிய சிகிச்சை எடுக்கம் வகையில் அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×