search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஃபேஸ் டைம்"

    ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் மற்றும் ஐபேட் சாதனங்களில் க்ரூப் ஃபேஸ்டைம் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.
    ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதள வெர்ஷன் செப்டம்பர் மாதம் முதல் பீட்டா பதிப்பில் உருவாக்கப்பட்டு, சமீபத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது.

    புதிய ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளத்தில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அம்சமான க்ரூப் ஃபேஸ்டைம் புதிய இயங்குதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் ஆப்பிள் நிறுவனம் க்ரூப் ஃபேஸ்டைம் அம்சத்தை பல வாடிக்கையாளர்கள் விரும்பி கேட்டிருந்ததாக அறிவித்தது.

    ஐ.ஓ.எஸ். 12.1 இயங்குதளத்தை அப்டேட் செய்த ஐ.ஓ.எஸ். பயனர்கள் அதிகபட்சம் 32 பேருடன் ஒரே சமயத்தில் ஃபேஸ்டைம் மூலம் பேச முடியும். இந்த அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைத் தொடர்ந்து பார்ப்போம்.



    1 -  ஃபேஸ்டைம் ஆப் சென்று வலதுபுறம் மேல்பக்கம் காணப்படும் ADD பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

    2 - மேல்புறம் இருக்கும் ஆப்ஷனில் நீங்கள் சாட் செய்ய வேண்டியவர்களின் பெயர் அல்லது நம்பர்களை பதிவு செய்ய வேண்டும்.

    3 - இங்கு Add Contact ஆப்ஷனை கிளிக் செய்தும் கான்ட்க்ட் ஆப் மூலம் நீங்கள் சாட் செய்ய வேண்டியவர்களை தேர்வு செய்யலாம்.

    4 - வீடியோ ஆப்ஷனை கிளிக் செய்து வீடியோ கால் அல்லது ஆடியோ ஐகானை கிளிக் செய்து ஃபேஸ்டைம் ஆடியோ கால் மேற்கொள்ள முடியும்.



    க்ரூப் மெசேஜஸ் உரையாடல்களில் இருந்தும் க்ரூப் ஃபேஸ்டைம் கால் துவங்கலாம். மெசஞ்சரில் சாட் செய்யும் நபருடன் அப்படியே கால் செய்து பேச முடியும்.

    1 - சாட் ஸ்கிரீனில் ப்ரோஃபைல் புகைப்படம் அல்லது மை அக்கவுன்ட் பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன் உரையாடல்களின் மேல்பக்கம் இடம்பெற்றிருக்கும்.

    2 - ஃபேஸ்டைம் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    க்ரூப் ஃபேஸ்டைம் கால் செய்யும் போது பயனர்கள் இடையே மற்றொரு நபரையும் சேர்க்க முடியும். இதை செய்ய:

    1 - ஸ்கிரீனினை கிளிக் செய்து Moreஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    2 - இனி Add Person ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

    3 - அடுத்து நீங்கள் சேர்க்க வேண்டிய நபரின் பெயர், ஆப்பிள் ஐ.டி. அல்லது போன் நம்பர் போன்றவற்றில் ஒன்றை பதிவிட வேண்டும்.

    4 - அல்லது Add பட்டன் கிளிக் செய்து மற்றவர்களை கான்டாக்ட்களில் இருந்தும் தேர்வு செய்யலாம்.

    5 - இறுதியில் ஃபேஸ்டைமில் அந்த நபரை சேர்க்கலாம்.

    க்ரூப் ஃபேஸ்டைம் மேற்கொள்ளும் போது யாரேனும் உங்களுக்கு அழைப்பு விடுத்தால், உங்களுக்கு சைலன்ட் நோட்டிஃபிகேஷன் அல்லது மெசேஜ் வரும். கால் ஆக்டிவாக இருக்கும் போது நோட்டிஃபிகேஷனை கிளிக் செய்து எப்போது வேண்டுமானாலும் உரையாடலில் இணைந்து கொள்ளலாம்.

    குறிப்பு:

    ஆப்பிள் ஐ.ஓ.எஸ். 12.1 குறிப்பில் க்ரூப் ஃபேஸ்டைம் வீடியோ கால்கள் ஐபோன் 5எஸ், ஐபோன் 6, ஐபோன் 6 பிளஸ், ஐபேட் ஏர், ஐபேட் மினி 2, ஐபேட் மினி 3, ஐபேட் மினி 4 மற்றும் 6ம் தலைமுறை ஐபாட் டச் உள்ளிட்ட சாதனங்களில் மட்டுமே வேலை செய்யும் என தெரிவித்திருக்கிறது.
    ×