என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth was arrested"

    • போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அங்கு கையில் பையுடன் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அன்னூர்

    கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கதவுக்கரை அம்மன் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, அங்கு கையில் பையுடன் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளிக்கவே போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் பீகார் மாநிலம் தர்பங்கா பகுதியை சேர்ந்த சஞ்சன் குமார் ராய்(32) என்பதும், சென்னிவீரம்பாளையத்தில் தங்கி அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. மேலும் இவர் கஞ்சா விற்பதற்காக அந்த பகுதியில் நின்றிருந்ததும் தெரிய வந்தது.இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து அரை கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • ஜீவானந்தம் (வயது 34) இவர் பல்லடத்தில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார்
    • வீட்டில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 4 லட்சம் மற்றும் 2 1/4 பவுன் நகை ஆகியவற்றை காணவில்லை.

    பல்லடம் : 

    பல்லடம் அருகே உள்ள கொடுவாய் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 34). இவர் பல்லடத்தில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி குடும்பத்துடன் திண்டுக்கல் சென்று விட்டார். பின்னர் அடுத்த நாள் காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சி அடைந்த ஜீவானந்தம் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 4 லட்சம் மற்றும் 2 1/4 பவுன் நகை ஆகியவற்றை காணவில்லை. இது குறித்து ஜீவானந்தம் அவினாசி பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பெருந்தொழுவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் திருப்பூர் காலேஜ் ரோட்டை சேர்ந்த அப்பாஸ் என்பவரது மகன் ஜீனஸிர்(20) என்பதும், இவர் ஜீவானந்தம் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடியது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரொக்கம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×