என் மலர்
நீங்கள் தேடியது "woman stir"
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த கெட்ணமல்லி கிராமத்தில் புதிதாக அரசு மதுபானகடை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல முறை மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனையடுத்து திறக்கப்பட்ட மதுக்கடை ஒவ்வொரு முறையும் மூடப்பட்டது.
மேலும் மதுக்கடைக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்த இரு தரப்பினரிடையேயான பேச்சுவார்த்தை கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் ஏற்கனவே நடந்து முடிந்தது. இதில் எவ்வித தீர்வும் காணப்படவில்லை. இதனையடுத்து மதுக்கடையும் தற்காலிகமாக மூடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் அந்த மதுக்கடை மீண்டும் திடீரென திறக்கப்பட்டது. இதனை அறிந்த அப்பகுதி பெண்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மதுக்கடையை முற்றுகையிட்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டாஸ்மாக் ஊழியர்கள், தாமாகவே முன்வந்து கடையை மூடி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பூர்:
வியாசர்பாடி நேதாஜி தெருவில் கடந்த 15-நாட்களுக்கு மேல் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பெரம்பூர் பஸ்நிலையம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.