என் மலர்
நீங்கள் தேடியது "குடிநீர் மறியல்"
திருப்பத்தூரில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் இன்று அவ்வைநகர் மெயின் ரோட்டில் மறியல் செய்தனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் நகராட்சி 35-வது வார்டு அவ்வைநகரில் பாதாள சாக்கடை பணியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு சப்ளை பாதிக்கப்பட்டது. இன்று வழக்கமாக வழங்கப்படும் லாரி குடிநீரும் வழங்கவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இன்று அவ்வைநகர் மெயின் ரோட்டில் மறியல் செய்தனர். நகராட்சி ஊழியர்கள் அந்த பகுதிக்கு உடனே லாரி மூலம் குடிநீர் சப்ளை செய்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
பெரம்பூரில் பஸ்நிலையம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பூர்:
வியாசர்பாடி நேதாஜி தெருவில் கடந்த 15-நாட்களுக்கு மேல் குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை பெரம்பூர் பஸ்நிலையம் அருகே திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் சமாதானம் பேசி கலைந்து போகச்செய்தனர்.






