என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "water floods in falls"

    • சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை.
    • அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் முழுவதும் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பெய்து வரும் மழையின் காரணமாக குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி ,பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அங்கு குளிப்பதற்கு போலீ சார் தடைவித்துள்ளனர்.

    தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வரும் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    கொடைக்கானலில் தொடர் மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    பெருமாள்மலை:

    கொடைக்கானலில் கோடை மழை பெய்ததால் மீண்டும் பசுமையாக காட்சி அளிக்க தொடங்கி உள்ளது. கோடை சீசனில் அக்னி நட்சத்திரத்திலும் மழை பெய்ததால் குளிர்ச்சியாக காணப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்திருந்து குளுகுளு சீசனை அனுபவித்து சென்றனர்.

    தற்போது சீசன் முடிந்துள்ளதால் கேரள பகுதியில் இருந்து மட்டும் கல்லூரி மாணவர்கள் வந்து செல்கின்றனர். கடந்த ஒரு வாரமாகவே கொடைக்கானலில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    மலைப்பகுதியில் ஆங்காங்கே புதிய அருவிகள் உருவாகி உள்ளது. மேலும் வட்டகானல், வெள்ளி நீர்வீழ்ச்சி ஆகியவற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். மேலும் விவசாயிகள் உருளைகிழங்கு, பீன்ஸ், காளிப்பிளவர், சவ்சவ், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டிருந்தனர். தொடர்ந்து பெய்து வரும் மழையால் அவை அனைத்தும் செழித்து வளர தொடங்கி உள்ளது. மேலும் நகர் பகுதிக்கு நீர் ஆதாரமாக உள்ள நகராட்சி நீர்தேக்கம் மற்றும் மனோரஞ்சிம் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.

    இதனால் கொடைக்கானல் பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இதமான சீதோசனம் நிலவி வருவதால் வார விடுமுறையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×