என் மலர்
நீங்கள் தேடியது "Volleyball player"
- ஆகாஷ் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் அவர்கள் மனு அளித்தனர்.
- ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேபாளத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கைவண்டுர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். கைப்பந்து வீரர். இவர் நேபாள நாட்டில் உள்ள போக்ரா நகரத்தில் உள்ள ரங்கசாலா விளையாட்டு மைதானத்தில் நடைப்பெறும் போட்டியில் கலந்து கொள்ள கடந்த 21-ந்தேதி சென்றிருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நேபாள நாட்டிற்கும் தமிழகத்திற்கும் நடைபெற்ற விளையாட்டில் முதல் சுற்றில் வெற்றி பெற்றதும் ஓய்வு எடுக்க ஆகாஷ் தனது அறைக்கு சென்றார். அப்போது ஆகாஷ் மர்மமான முறையில் திடீரென உயிரிழந்தார்.
இதனை அறிந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆகாஷ் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் அவர்கள் மனு அளித்தனர்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நேபாளத்தில் இருந்து ஆகாஷ் உடலை கொண்டு வர தமிழக வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேபாளத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது. பின்னர் கைவண்டுர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு ஆகாசின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
இன்று காலை பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆகாசின் உடல் வைக்கப்பட்டது. அமைச்சர் சா.மு.நாசர், எம்.எல்.ஏ.க்கள் சந்திரன், ஜோசப் சாமுவேல் ஆகியோர் ஆகாசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பொதுமக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இன்று மதியம் கைவண்டுர் பகுதியில் ஆகாசின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
- தேசிய அளவிலான போட்டியில் தங்கம் வென்றவர்
- வேலைக்கு சென்று பணத்தை சேர்த்து விளையாடி வருகிறார்
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த திருப்பதி (வயது 57) இவரது மகன் அசோக்குமார் (வயது 23) இவர் பள்ளி பருவ காலத்திலிருந்து வாலிபால் விளையாட்டின் மீது கொண்டிருந்த ஆர்வத்தினால் பள்ளி காலத்திலேயே பயிற்சி பெற்று பள்ளி அளவிலான போட்டிகளிலும் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகளிலும் வெற்றி பெற்று பரிசுகளை வென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது தந்தை நோய்வாய்ப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். கல்லூரி படிப்பை முடித்த அசோக்குமார் கல்லூரி படிக்கும் போதும் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றதால் மாநில அளவில் விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
கேரளாவில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடி கேரளா அணியை (24 -21) என்ற வித்தியாசத்தில் தோற்கடித்து தனது தனி திறமையால் தேசிய அளவில் விளையாடுவதற்கு தகுதி பெற்றார்.
கோவாவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் சுமார் 15 அணிகள் கலந்து கொண்டன கோவா அணியை (24-17) என்ற வித்தியாசத்தில் அணியை வெற்றி பெற செய்து தங்கப்பதக்கம் பெற்றார்.
வறுமையின் காரணமாக நேபாளத்தில் நடைபெறும் உலக அளவிலான கைப்பந்து போட்டியில் அசோக்குமார் பங்கேற்க முடியாமல் தவித்து வந்துள்ளார் இது குறித்து தகவல் அறிந்த அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் நிதியுதவி செய்து அசோக்கை நேபாளத்தில் நடைபெறும் பயிற்சி வகுப்பு மற்றும் போட்டியில் பங்கேற்க அனுப்பி வைத்துள்ளனர்.
நேபாளத்தில் நடைபெற்ற தேசிய அளவிலன போட்டியில் சுமார் ஆறு நாடுகள் கலந்து கொண்டன இதில் இறுதியாக நேபால் அணியை (24-19) என்ற விகிதத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்
அசோக் குமார் ஒவ்வொரு முறையும் நேபாளத்திற்கு சென்று வர 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் செலவாகி வருவதாகவும் இதனால் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து கைப்பந்து விளையாட செல்லும் சூழ்நிலைக்கு தல்லப்பட்டுள்ளார்.
அவ்வப்போது கிடைக்கும் வேலைகளை செய்து வரும் வருமானத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தந்தையின் மருத்துவச் செலவிற்கும் கல்லூரி படித்து வரும் தம்பியின் படிப்புச் செலவிற்குமே பணம் போதவில்லை எனவும் தேசிய அளவிலும் உலக அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் அரசு சார்பில் மனநலம் பாதிக்கப்பட்ட தனது தந்தையின் சிகிச்சைக்கு உதவ வேண்டும் எனவும் வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம், சிஸ்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் குல்தீப் (வயது 25). வாலிபால் வீரரான இவர், மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில், நேற்று வாலிபால் கிரவுண்டில் பயிற்சி செய்த குல்தீப் இரவில் வீடு திரும்பினார்.
இரவு 10 மணியளவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது அவரது பைக்கை வழிமறித்த ஒரு கும்பல், திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. தோட்டாக்கள் உடலில் பாய்ந்தால் நிலைகுலைந்து விழுந்த குல்தீப், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
சம்பவம் நடந்த இடத்தில் தெருவிளக்குகள் இல்லாததால் இருட்டாக இருந்தது. இதனை சாதகமாகப் பயன்படுத்தி குற்றவாளிகள் எளிதாக தப்பிச் சென்றுள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். #VolleyballPlayerShot






