என் மலர்
செய்திகள்

அரியானாவில் வாலிபால் வீரர் சுட்டுக் கொலை - மர்ம நபர்களை தேடுகிறது போலீஸ்
அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் வாலிபால் வீரர் ஒருவரை மர்ம நபர்கள் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #VolleyballPlayerShot
ஹிசார்:
அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டம், சிஸ்வால் கிராமத்தைச் சேர்ந்தவர் குல்தீப் (வயது 25). வாலிபால் வீரரான இவர், மாவட்ட அளவிலான போட்டிகளில் விளையாடி வந்தார். இந்நிலையில், நேற்று வாலிபால் கிரவுண்டில் பயிற்சி செய்த குல்தீப் இரவில் வீடு திரும்பினார்.
இரவு 10 மணியளவில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் வந்தபோது அவரது பைக்கை வழிமறித்த ஒரு கும்பல், திடீரென அவரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டது. தோட்டாக்கள் உடலில் பாய்ந்தால் நிலைகுலைந்து விழுந்த குல்தீப், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
சம்பவம் நடந்த இடத்தில் தெருவிளக்குகள் இல்லாததால் இருட்டாக இருந்தது. இதனை சாதகமாகப் பயன்படுத்தி குற்றவாளிகள் எளிதாக தப்பிச் சென்றுள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர். #VolleyballPlayerShot

Next Story