search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vishwakarma scheme"

    • இன்று மோடியின் 73-வது பிறந்த நாளுக்கு பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்
    • விஸ்வகர்மா திட்டத்திற்கான இலச்சினையையும் இணைய முகப்பையும் அறிமுகப்படுத்தினார்

    2023 ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தினத்தன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கலை மற்றும் கைவினை கலைஞர்களுக்கு பயனளிக்கும் வகையில் "விஸ்வகர்மா திட்டம்" எனும் புதிய திட்டம் குறித்து தனது உரையில் குறிப்பிட்டார்.

    இன்று அவரது 73-வது பிறந்த நாளையொட்டி பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். அதையொட்டி நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார்.

    முதலில் டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணித்து சென்று யஷோபூமி துவாரகா செக்டார் 25 ரெயில் நிலையம் எனும் செக்டார் 21 மெட்ரோ ரெயில் நிலையத்தின் நீட்டிக்கப்பட்ட புதிய வழித்தடத்தை திறந்து வைத்தார்.

    அதற்கு பிறகு, டெல்லியின் துவாரகா பகுதியில் அமைக்கப்பட்ட "யஷோபூமி" என பெயரிடப்பட்டிருக்கும் உலகிலேயே மிக பெரிய சர்வதேச கண்காட்சி மற்றும் கருத்தரங்க மையத்தையும் (IICC) திறந்து வைத்தார். மொத்தம் 8.9 லட்சம் சதுர மீட்டரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த மையம் 1.8 லட்சம் சதுர மீட்டர் கட்டிடப்பரப்பு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    அதற்கு பிறகு விஸ்வகர்மா திட்டத்திற்கான இலச்சினையையும், சின்னத்தையும், இணைய முகப்பையும் டேக்லைனுடன் துவங்கி வைத்து உரையாற்றினார்.

    அப்போது மோடி குறிப்பிட்டதாவது:

    வரும் காலங்களில் புதிய தொழில்நுட்பங்கள் உபகரணங்கள் குறித்து உங்களுக்கு பயிற்சி தேவை. அதனை அரசு உங்களுக்கு இத்திட்டத்தின் மூலம் வழங்கும். இப்பயிற்சியின் போது ரூ.500 வழங்கப்படுவதுடன் உபகரணங்களுக்கான தொகையாக ரூ.1500 உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் பொருட்களை பெயரிடுவதிலும், சந்தைப்படுத்துவதிலும் அரசு உங்களுக்கு உதவும். நீங்கள் உங்கள் உபகரணங்களை ஜிஎஸ்டி பதிவு செய்யப்பட்ட கடைகளில் மட்டுமே வாங்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் துவங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்படி இதில் சேரும் கலைஞர்களுக்கு அடையாள அட்டை, திறன் மேம்பாட்டு உதவி, உபகரண ஊக்கத்தொகையாக ரூ.15,000, பிணையில்லா கடனாக முதற் பகுதியாக ரூ.1 லட்சமும் பின்னர் ரூ.2 லட்சம் ஆகியவற்றுடன் அவர்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்திட உதவியும் வழங்கப்படும்.

    இத்திட்டத்தில் 18 வகையான கலை மற்றும் கைவினை தொழில்கள் இடம்பெறும்.

    • சுதந்திர தின உரையில் 2 பெரும் திட்டங்களை பிரதமர் அறிவித்தார்
    • மானிய விலையில் பிணையில்லாத கடன்கள் வழங்கப்படும்

    இந்தியாவின் 77வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.

    இதையொட்டி நேற்று காலை புது டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு இந்திய பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது அவர் விஸ்வகர்மா யோஜனா மற்றும் லக்பதி தீதி எனும் இரு பெரும் திட்டங்களை நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA), புதிய மத்திய அரசாங்கத்தின் திட்டமான "PM விஸ்வகர்மா"-க்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    "நேற்று சுதந்திர தின உரையில் பிரதமரால் அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், நாடு முழுவதுமுள்ள 30 லட்சம் கைவினை கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு மானிய விலையில் பிணையமில்லாத கடன்கள் வழங்கப்படும். 2023-ல் தொடங்கி 2028 ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு இதற்காக ரூ.13,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக இத்திட்டத்திற்காக 18 பாரம்பரிய வர்த்தகங்கள் சேர்க்கப்படும்" என இத்திட்டம் குறித்து மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் கூறியுள்ளார்.

    "பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தின் மூலம், கைவினை கலைஞர்களுக்கு PM விஸ்வகர்மா சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் ஆகியவற்றோடு 5 சதவீத சலுகை வட்டியில் முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரை கடன் உதவியும், இரண்டாவது தவணையாக ரூ. 2 லட்சம் வரை கடன் உதவியும் வழங்கப்படும். மேலும், இந்த திட்டத்தின் மூலம் கலைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுக்கு உதவி, கருவிகள் வாங்க ஊக்குவிப்பு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான ஊக்குவிப்பு மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தலுக்கான ஆதரவு ஆகியவையும் வழங்கப்படும்" என்று இத்திட்டம் குறித்து மத்திய அரசாங்கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    PM விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக தச்சர்கள், படகு தயாரிப்பாளர்கள், கொல்லர்கள், பூட்டு தயாரிப்பு கலைஞர்கள், பொற்கொல்லர்கள், குயவர்கள், சிற்பிகள், காலணி தொழிலாளிகள் மற்றும் கொத்தனார்கள் ஆகியோர் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

    ×