என் மலர்

  நீங்கள் தேடியது "Vedaranyam suicide"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேதாரண்யம் அருகே வயிற்று வலி காரணமாக 2 குழந்தைகளின் தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  வேதாரண்யம்:

  வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினம் காவல் சரகம் கத்தரிப்புலம் கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி ராதிகா (வயது 25). இவர்களுக்கு 5 வயதில் ஒரு ஆண் குழந்தை, 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது.

  ராதிகா வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  இதுகுறித்த புகாரின்பேரில் கரியாப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேதாரண்யம் அருகே பெற்றோர் கண்டித்ததால் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  வேதாரண்யம்:

  வேதாரண்யத்தை அடுத்த பன்னாள் நடுகாட்டு பகுதியை சேர்ந்தவர் உதயகுமார் மகன் அழகியமாறன் (வயது 19). இவர் 9-ம் வகுப்பு படித்துவிட்டு சொந்தமாக ஆட்டோ வாங்கி ஓட்டி வருகிறார். இந்த நிலையில் அழகிய மாறன் ஆட்டோ சவாரிக்கு செல்லாததால் அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

  இதில் மனமுடைந்த அழகியமாறன் வி‌ஷம் குடித்து மயங்கி விழுந்தார். அவரை மீட்டு திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுபற்றி வாய்மேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வைத்தியலிங்கம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேதாரண்யத்தில் கலப்பு திருமணம் செய்த வாலிபர் குடும்ப தகராறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  வேதாரண்யம்:

  நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி பூவந்தோப்பை சேர்ந்த சுப்பிரமணியம் மகன் வடிவழகன் (வயது 27). லாரி டிரைவர். இவர் உப்பள தொழிலாளர்கள் குடியிருப்பில் வசித்து வந்தார். இவரது மனைவி சக்திபிரியா. இவர்களுக்கு 1½ வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

  வடிவழகனும், சக்தி பிரியாவும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டவர்கள்.

  இந்த நிலையில் தனது குடும்பத்தினர் விசே‌ஷத்திற்காக சக்திபிரியா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதுதொடர்பாக கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு செய்துள்ளனர்.

  இந்த சம்பவத்தில் மனமுடைந்த வடிவழகன் கடந்த 26-ந்தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி அறியாத சக்திபிரியா நேற்று இரவு வீட்டுக்கு வந்தார். அப்போது வடிவழகன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து சில நாட்கள் ஆகி விட்டதால் உடல் அழுகி துர்நாற்றம் வீசியது.

  இதுபற்றிய புகாரின் பேரில் வேதாரண்யம் இன்ஸ்பெக்டர் முருகவேல், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் தமிழரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அகஸ்தியன்பள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
  ×