என் மலர்

  நீங்கள் தேடியது "union minister ravi shankar prasad"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி மற்றும் மாயாவதி ஆகிய மூவருமே பிரதமர் பதவியில் குறியாக உள்ளனர் என மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். #AntiBJPRally #MamtaBanerjee #RahulGandhi #Mayawati #RavishankarPrasad #NarendraModi
  புதுடெல்லி:

  மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தா நகரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பல மாநிலங்களில் உள்ள 22 முக்கிய கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினர். இதில் கூட்டத்தில் பேசிய தலைவர்கள் மக்களால் தான் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என கூறினர்

  இந்நிலையில், மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி மற்றும் மாயாவதி ஆகிய மூவருமே பிரதமர் பதவியில் குறியாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.  இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஒருவரை ஒருவர் சந்தித்திராத எதிர்க்கட்சியினர் கொல்கத்தாவில் கூடியதன் நோக்கம் மோடியை அகற்றுவதே. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் எதிர்க்கட்சிகளிடம் இல்லை.

  காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாயாவதி, மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அனைவரும் பிரதமராகும் நோக்கிலேயே உள்ளனர்.

  மக்களால் தான் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என சிலர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. மக்கள் தேர்ந்தெடுத்த கட்சித் தலைவர் எவரேனும் இருந்தால் அதை அரசியல் கட்சிகள் கூறலாம் என குறிப்பிட்டார். #AntiBJPRally #MamtaBanerjee #RahulGandhi #Mayawati #RavishankarPrasad #NarendraModi
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். #Gaganyaan #ISRO #RaviShankarPrasad
  புதுடெல்லி:

  பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முத்தலாக் மசோதா உள்பட பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

  இந்நிலையில், மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத்  டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவிலான இந்த திட்டத்தின் மூலம் 2 ஆளில்லா விண்கலங்கள் மற்றும் 3 பேர் கொண்ட குழுவை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோவுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என தெரிவித்துள்ளார். #Gaganyaan #ISRO #RaviShankarPrasad
  ×