என் மலர்
நீங்கள் தேடியது "Udumalai - Kozhumam road"
- கொழுமம், பழநி செல்லும் ரோடு,18.80 கி.மீ., தூரம் கொண்டது.
- பொதுமக்கள், வாகனங்கள் என போக்குவரத்து அதிகம் செல்லும் ரோடாக உள்ளது.
உடுமலை :
உடுமலையில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து கொமரலிங்கம், கொழுமம், பழநி செல்லும் ரோடு, 18.80 கி.மீ., தூரம் கொண்டது. உடுமலையிலிருந்து பழனிக்கு மாற்றுப்பாதையாக மாநில நெடுஞ்சாலைத்துறை ரோடு உள்ளது. பொதுமக்கள் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பள்ளி, கல்லூரி வாகனங்கள் என போக்குவரத்து அதிகம் செல்லும் ரோடாக உள்ளது.
இந்த ரோட்டில் நகர பகுதியில் ஏராளமான குடியிருப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளது. பிரதான போக்குவரத்து சாலையாக உள்ளதால் போக்குவரத்து நெரிசலும் நிரந்தரமாக உள்ளது. எனவே இந்த ரோட்டை அகலப்படுத்த வேண்டும்.மேலும் திண்டுக்கல்-பாலக்காடு அகல ரெயில்பாதை செல்கிறது. அகல ரெயில்பாதையில் ரெயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் அவை கடக்கும் போது பல கி.மீ., தூரத்திற்கு வாகனங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே கொழுமம் ரோட்டை அகலப்படுத்தவும், ரெயில்வே கேட் பகுதியில்மேம்பாலம் அமைக்கவும் வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.