என் மலர்

  நீங்கள் தேடியது "Trump Administration"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர தடை விதிக்கும் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. #TrumpAdministration #Transgender #USMilitary
  வாஷிங்டன்:

  பாலியல் பாகுபாடின்றி அனைவரும் சரிசமமான வேலைபாய்ப்புகளை பெறும் வகையில் அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்களும் சேர்ந்து பணியாற்றலாம் என்ற புதிய உத்தரவை முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கடந்த 2016-ம் ஆண்டில் பிறப்பித்தார்.

  பல்வேறு தரப்பினரின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்ற உத்தரவில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் சில கொள்கை முடிவுகளை மாற்றினார்.

  மூன்றாம் பாலினத்தவர்களாக மாறுவதற்கான அறுவை சிகிச்சைகள் முடிந்து முழுமையாக ஆணாகவோ, பெண்ணாகவோ மாறி விட்டவர்கள் மட்டுமே இனி முப்படைகளின் பணிக்காக விண்ணப்பிக்க முடியும்.  மனதளவில் மாற்றம்பெற்று, சரியான நிலைப்பாடு எடுக்க முடியாமல் தடுமாற்றத்துடன் உடல்ரீதியாக மாற்றமடையாதவர்கள் பணிகளில் சேர்ந்த பிறகு விடுமுறை எடுத்துக்கொண்டு அறுவை சிகிச்சைக்கு செல்வதால் ஆள்பற்றாக்குறையும் அரசுக்கு அதிகமான செலவினமும் ஏற்படுவதாக கருதிய டிரம்ப், அமெரிக்க ராணுவத்தில் மூன்றாம் பாலினத்தவர்கள் சேர தடை விதிக்க தீர்மானித்து உத்தரவிட்டார்.

  இது முற்றிலுமான தடையல்ல, ராணுவத்தில் சேருவதற்காக உளவியல் மற்றும் உடல் கூறியல்களை கண்டறிய அமைக்கப்பட்டுள்ள குழுவினரின் பரிந்துரைக்கு பின்னர் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

  இந்த உத்தரவு நேற்று முதல் நடைமுறைக்கு வந்ததாக அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்ட்டகான் தெரிவித்துள்ளது. அந்நாட்டின் முப்படைகளில் பணியாற்றும் சுமார் 13 லட்சம் பேரில் மூன்றாம் பாலினத்தவர்கள் எண்ணிக்கை தற்போது சுமார் 9 ஆயிரமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. #TrumpAdministration #Transgender #USMilitary  #TransgenderMilitaryPolicy
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை வழங்குகிற ‘கிரீன் கார்டு’ வழங்குவதில் புதிய கட்டுப்பாடு விதிக்க டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. #GreenCard #TrumpAdministration
  வாஷிங்டன்:

  அமெரிக்காவில் ‘எச்-1 பி’ விசாதாரர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு ‘எச்-4’ விசா கொடுத்து பணி செய்வதற்கு முந்தைய ஒபாமா அரசு அனுமதி அளித்தது. இந்த அனுமதியை திரும்பப்பெறுவதற்கு டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது இந்தியர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்.

  இந்த நிலையில் அமெரிக்காவில் குடியிருப்பதற்கு நிரந்தர குடியுரிமை வழங்குகிற ‘கிரீன் கார்டு’ வழங்குவதில் புதிய கட்டுப்பாடு விதிக்க டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இது தொடர்பாக அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புத்துறை, அரசுக்கு அளித்துள்ள ஆலோசனையில், அமெரிக்காவில் உணவு மற்றும் நிதி உதவி பெற்று வந்த பிற நாட்டினர் அல்லது பெற விரும்புகிற பிற நாட்டினருக்கு நிரந்தர குடியுரிமை (கிரீன் கார்டு) வழங்க தேவையில்லை என்று கூறி உள்ளது. இந்த ஆலோசனையை டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து ஏற்றுக்கொண்டு, உத்தரவு பிறப்பித்தால் இதுவும் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

  ஆனால் உள்நாட்டு பாதுகாப்புத்துறை முன்மொழிந்துள்ள இந்த திட்டத்தை பேஸ்புக், மைக்ரோசாப்ட், டிராப்பாக்ஸ், யாகூ, கூகுள் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை அமல்படுத்தினால், ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் பாதிப்பு ஏற்படும் என இவை தெரிவித்துள்ளன. #GreenCard #TrumpAdministration  
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவின் இ.பி-5 விசா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்திடம் டிரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.
  வாஷிங்டன்:

  அமெரிக்காவில் 10 உள்நாட்டு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில், குறைந்தபட்சம் 1 மில்லியன் டாலர் (சுமார் ரூ.6 கோடியே 80 லட்சம்) தொழில் முதலீடு செய்கிற வெளிநாட்டினருக்கு ‘இ.பி-5 விசா’ வழங்கப்பட்டு வருகிறது. இதன்கீழ் வருகிறவர்களுக்கு ‘கிரீன் கார்டு’ என்ற நிரந்தர சட்டப்பூர்வ குடி உரிமை கிடைக்கிறது.

  இந்த விசா ஆண்டுக்கு 10 ஆயிரம் பேருக்கு தரப்படுகிறது. ஒரு நாட்டுக்கு அதிகபட்சம் 7 சதவீதம் வழங்கப்படும்.

  ஆனால் இந்த திட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகவும், மோசடிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது. இத்தகைய சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இந்த விசா திட்டத்துக்கு அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  இந்த நிலையில், ஒன்று, இந்த விசா திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்திடம் டிரம்ப் நிர்வாகம் கேட்டுக்கொண்டு உள்ளது.

  இந்த விசா திட்டத்தின் கீழ் அதிகமாக விண்ணப்பிக்கும் நாடுகளின் பட்டியலில் சீனா, வியட்நாமைத் தொடர்ந்து இந்தியா 3-ம் இடத்தில் உள்ளது.

  சீனாதான் அதிகளவில் மோசடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 
  ×