search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy Hospital"

    திருப்பதி சென்று திரும்பிய கரூர் விவசாயி பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    மணப்பாறை:

    கரூர் மாவட்டம் ராச்சாண்டர் திருமலை அருகே யுள்ளது ஆர்ச்சம்பட்டி. இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி ரவிச்சந்திரன் கடந்த வாரம் திருப்பதி பிரமோற்சவ விழாவிற்கு சென்று திரும்பினார். வீட்டிற்கு வந்தவுடன் அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. 2 நாட்களாக தொடர்ந்து காய்ச்சல் இருந்ததால், மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பன்றி காய்ச்சல் அறிகுறி இருப்பதால் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடந்த பரிசோதனையில் ரவிச்சந்திரனுக்கு பன்றி காய்ச்சல் இருப்பது பரிசோதனை மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    மேலும் திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் பன்றி காய்ச்சல் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர். பன்றி காய்ச்சல் பரவி வருவது திருச்சி-கரூர் மாவட்ட பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    பிசியோதெரபிஸ்ட் டாக்டர் கொலை வழக்கில் கூலிப்படையுடன் கைதான மாணவி ஈஸ்வரி திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு போலீஸ் பாதுகாப்புடன் மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.
    திருச்சி:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியை சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் டாக்டரான விஜயகுமார் (வயது 36) என்பவரை திருச்சியை சேர்ந்த மாணவி ஈஸ்வரி (21) என்பவர் கூலிப்படையை ஏவி கடந்த 8-ந் தேதி கொலை செய்தார்.

    இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் ஈஸ்வரி மற்றும் கூலிப்படையை சேர்ந்த மாரி முத்து, கணேஷ், குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் விஜயகுமாரிடம் பறித்த நகை ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    ஈஸ்வரி சென்னை நுங்கம்பாக்கத்தில் தங்கி சி.ஏ. படித்த போது, அங்கு தனியார் ஆஸ்பத்திரியில் பிசியோதெரபிஸ்டாக வேலை பார்த்த விஜயகுமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விஜயகுமார் தனக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து ஈஸ்வரியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது ஈஸ்வரியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். தன்னுடன் ஈஸ்வரி உல்லாசமாக இருப்பதை வீடியோவும் எடுத்துள்ளார். விஜயகுமாருக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதை அறிந்ததும், ஈஸ்வரி அவரைவிட்டு விலக தொடங்கியுள்ளார். ஆனால் விஜயகுமார் தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததுடன் தன்னை திருமணம் செய்யாவிட்டால் உல்லாசமாக இருந்த படத்தை யுடியூப்பில் வெளியிடுவதோடு, ஈஸ்வரியின் தந்தை, தங்கையையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதால் ஆத்திரத்தில் ஈஸ்வரி கூலிப்படையை ஏவி விஜயகுமாரை கொன்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    கைதான கூலிப்படை ஆட்கள் மாரிமுத்து, கணேஷ், குமார் ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். ஆனால் ஈஸ்வரியை பெண்கள் சிறையில் அடைக்க அழைத்து சென்ற போது சிறைத்துறை போலீசார் மருத்துவ சான்றிதழ் அளித்த பிறகு தான் காவலில் அடைக்க முடியும் என கூறி விட்டனர்.

    இதனால் மாணவி ஈஸ்வரி நேற்று இரவு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இன்று மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுகிறது.

    கொலை செய்யப்பட்ட டாக்டர் விஜயகுமார் தன்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்ததாக ஈஸ்வரி கூறியுள்ளார். அவருக்கு பாலியல் சோதனை உட்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்படுகிறது. மருத்துவ பரிசோதனை முடிந்ததும் ஈஸ்வரி திருச்சி பெண்கள் சிறையில் அடைக்கப்படுவார்.

    இதற்கிடையே ஈஸ்வரி அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரி அறை முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விடிய விடிய போலீசார் பாதுகாப்பிற்கு நின்றிருந்தனர். இரவில் ஈஸ்வரி தனக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி கண்ணீர் வடித்தபடியே இருந்துள்ளார்.
    நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை வந்து கொண்டிருந்த அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்தியானந்த்துக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    திருச்சி:

    நெல்லை மாநகராட்சி மேயராக இருந்தவர் விஜிலா சத்தியானந்த். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் தற்போது ராஜ்ய சபா உறுப்பினராக உள்ளார். நேற்று முன்தினம் நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. வகுப்பில் பயணம் செய்தார்.

    ரெயில் நள்ளிரவு திருச்சி வந்த போது விஜிலா சத்தியானந்துக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவர் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் உள்ள அவசர சிகிச்சை மையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பிறகு தொடர்ந்து அதே ரெயிலில் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

    ரெயில் பொன்மலை ரெயில் நிலையம் அருகே சென்ற போது மீண்டும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் சென்றவர்கள் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு விஜிலா சத்தியானந்த் அழைத்து செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு உடல் நிலை பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று 2-வது நாளாக விஜிலா சத்தியானந்த் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவரை அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினரும், திருச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான குமார் எம்.பி. சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. #VijilaSathyananth
    ×