search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எம்பி விஜிலாசத்தியானந்திடம் திருச்சி மாவட்ட செயலாளர் குமார் எம்பி உடல்நிலை குறித்து விசாரித்தபோது எடுத்தபடம்.
    X
    எம்பி விஜிலாசத்தியானந்திடம் திருச்சி மாவட்ட செயலாளர் குமார் எம்பி உடல்நிலை குறித்து விசாரித்தபோது எடுத்தபடம்.

    அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்தியானந்த் திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதி

    நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை வந்து கொண்டிருந்த அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்தியானந்த்துக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக திருச்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    திருச்சி:

    நெல்லை மாநகராட்சி மேயராக இருந்தவர் விஜிலா சத்தியானந்த். அ.தி.மு.க.வை சேர்ந்த இவர் தற்போது ராஜ்ய சபா உறுப்பினராக உள்ளார். நேற்று முன்தினம் நெல்லையில் இருந்து சென்னைக்கு சென்ற நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏ.சி. வகுப்பில் பயணம் செய்தார்.

    ரெயில் நள்ளிரவு திருச்சி வந்த போது விஜிலா சத்தியானந்துக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவர் திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் உள்ள அவசர சிகிச்சை மையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றார். பிறகு தொடர்ந்து அதே ரெயிலில் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

    ரெயில் பொன்மலை ரெயில் நிலையம் அருகே சென்ற போது மீண்டும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் சென்றவர்கள் அபாய சங்கிலியை இழுத்து ரெயிலை நிறுத்தினர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு விஜிலா சத்தியானந்த் அழைத்து செல்லப்பட்டார்.

    அங்கு அவருக்கு உடல் நிலை பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று 2-வது நாளாக விஜிலா சத்தியானந்த் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவரை அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினரும், திருச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான குமார் எம்.பி. சந்தித்து உடல்நலம் விசாரித்தார். அவர் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. #VijilaSathyananth
    Next Story
    ×