என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "travel plans"

    • தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • சிறப்பு பேருந்து இயக்கத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    பொங்கல் பண்டிகையை முடித்து சென்னை திரும்பும் மக்கள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பயணத் திட்டங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று பொது மக்களுக்கு போக்குவரத்துத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    இதுகுறித்து போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பொங்கல் பண்டிகையை முடித்து பயணிகள் சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிச்செல்ல ஏதுவாக 17.01.2025, 18.01.2025, 19.01.2025, 20.01.2025 ஆகிய நான்கு நாட்கள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிமிடெட், விழுப்புரம் கோட்டம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    19.01.2025 அன்று பொதுமக்கள் அதிக அளவில் பயணிக்க வாய்ப்பு உள்ளதால் அன்றைய தினத்தில் கூட்ட நெரிசலை தவிர்த்திடும் பொருட்டு பொதுமக்கள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே 17.01.2025 மற்றும் 18.01.2025 ஆகிய தேதிகளில் திட்டமிட்டு இந்த சிறப்பு பேருந்து இயக்கத்தினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தானில் பதற்றம் நிறைந்த பகுதிகளுக்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. #USTravelAdvisory #USPakAdvisory
    வாஷிங்டன்:

    பாகிஸ்தான் நாட்டிற்கு அமெரிக்கர்கள் பயணம் மேற்கொள்வது குறித்து அமெரிக்க அரசு, புதிய பயண அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த பயண அறிவுறுத்தலில், பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் பதற்றம் நிறைந்த பகுதிகள் வகைப்படுத்தப்பட்டு பட்டியலிடப்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை வகுத்துக்கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளது.

    இந்த பட்டியலில் பாகிஸ்தானை பொதுவாக அபாயம் நிறைந்த 3வது நிலையில் வைத்துள்ளது. பலூசிஸ்தான், கைபர் பாக்துன்க்வா மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை உள்ளிட்ட பல்வேறு இடங்களை மிகவும் அபாயகரமான 4-வது நிலையில் வைத்துள்ளது.



    “பாகிஸ்தானுக்குள் மற்றும் பாகிஸ்தான் அருகே விமான போக்குவரத்து மிகவும் ஆபத்தானது. போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், ராணுவ அமைப்புகள், விமான நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், சுற்றுலா மையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் பயங்கரவாத குழுக்கள் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டுகின்றனர். கடந்த காலங்களில் அமெரிக்க தூதர்கள் மற்றும் தூதரக அலுவலகங்களை குறிவைத்தும் தாக்குதல் நடத்தப்பட்டது. அதேபோன்ற தாக்குதல்கள் தொடரலாம் என தகவல்கள் வந்துள்ளன.

    பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தும் அபாயம் உள்ளதால் பொதுவாக பாகிஸ்தானுக்கு செல்லும் பயணத் திட்டங்களை அமெரிக்க மக்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். குறிப்பாக, மிகவும் அபாயகரமான தாக்குதல் நடக்கும் பகுதிகளான பலூசிஸ்தான், கைபர் பாக்துன்க்வா மாகாணம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், இந்தியா-பாகிஸ்தான் எல்லை உள்ளிட்ட இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என வெளியுறவுத்துறை தனது பயண அறிவுறுத்தலில் கூறியுள்ளது. #USTravelAdvisory #USPakAdvisory
    ×