search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trains Canceled"

    • பல ரெயில்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வராத வகையில் நிறுத்தம் செய்யப்பட்டது.
    • ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகளிடமிருந்து வந்த வருமானத்தில் ரூ.35 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    சென்னை:

    மிச்சாங் புயல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டி போட்டது. புயல் காரணமாக 650 மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 4 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டன.

    40 ரெயில்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன. பல ரெயில்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வராத வகையில் நிறுத்தம் செய்யப்பட்டது.

    ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகளிடமிருந்து வந்த வருமானத்தில் ரூ.35 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

    ரத்து செய்யப்பட்ட ரெயில்களில் கட்டணத்தை பயணிகள் திரும்ப பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இதற்கு வசதியாக ரெயில் நிலையங்களில் சிறப்பு கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பயணிகள் தங்களது டிக்கெட் மூலம் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சென்னையில் ஆவடி ,கொருக்குப்பேட்டை, சென்னை கடற்கரை ,எழும்பூர், சென்னை சென்ட்ரல் ஆகியவை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன.

    குறிப்பாக பேசின் பாலத்தில் உள்ள 14-வது எண் பாலத்தின் உயரம் கனமழை பாதிக்காத வகையில் 2 ஆண்டுகளில் புனரமைக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    • சுரங்கப்பாதை பணி காரணமாக 14 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.
    • 6 ரெயில்கள் குறிப்பிட்ட நாட்களில் நேரம் மாற்றி இயக்கப்பட உள்ளன.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஜோலார்பேட்டை- கே. எஸ்.ஆர். பெங்களூரு மார்க்கத்தில், ஜோலார்பேட்டை- சோமநாயக்கன் பட்டிக்கு இடையே சுரங்கப்பாதை பணி காரணமாக 14 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன.

    சென்னை சென்ட்ரல்-திருப்பதிக்கு வருகிற 12, 13, 14, 15, 20, 21, 23, 25 ஆகிய தேதிகளில் மாலை 4.35 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (16203), திருப்பதி- சென்னை சென்ட்ரலுக்கு 12, 13,14, 15, 21, 22, 24, 25 ஆகிய தேதிகளில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16204), சென்னை சென்ட்ரல்- மைசூருக்கு 12, 13, 14, 20, 21, 23, 24 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் காவிரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16021), மைசூரு- சென்னை சென்ட்ரலுக்கு 13, 14, 15, 21, 22, 24 25 ஆகிய தேதிகளில் இரவு 9 மணிக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16022) உள்பட 14 ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. இது தவிர, 6 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளன.

    சென்னை சென்ட்ரல்- கே.எஸ்.ஆர். பெங்களூருவுக்கு 12-ந்தேதி இரவு 10.50 மணிக்கு புறப்பட வேண்டிய எக்ஸ்பிரஸ் ரெயில் (12657) 1½ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும். இது தவிர 6 ரெயில்கள் குறிப்பிட்ட நாட்களில் நேரம் மாற்றி இயக்கப்பட உள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை - கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் அந்த வழியாக செல்லும் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. #Expresstrains #Flood
    நெல்லை:

    கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் மழை பெய்கிறது.

    நெல்லை - கன்னியாகுமரி மாவட்டங்களில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குமரி மாவட்டத்தில் கனமழை காரணமாக மண்சரிவு ஏற்பட்டது.



    இதனால் நெல்லை-குமரி மாவட்டங்களில் ரெயில் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று 15 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. இன்றும் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதால் ரத்து செய்யப்பட்டது.

    நெல்லை - நாகர்கேவில் (56718) பயணிகள் ரெயில், செங்கோட்டை - கொல்லம் (56335/56336) பயணிகள் ரெயில், புனலூர் - கொல்லம் - புனலூர் ரெயில், கொல்லம் - புனலூர்-கொல்லம் ரெயில், புனலூர் - கன்னியாகுமரி, புனலூர் ரெயில் ஆகியவை இன்று ரத்து செய்யப்பட்டன.

    மதுரை கோட்டத்தில் செங்கோட்டை- புனலூர் இடையே மண்சரிவு காரணமாக அந்த வழியாக செல்லும் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    வாரத்தில் மூன்று முறை இயக்கப்படும் கொல்லம் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் கொல்லம்- செங்கோட்டை இடையேயான சேவை பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    புனலூரில் இருந்து இன்று (16-ந் தேதி) புறப்படுவதாக இருந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 56365/ 56366) போக்குவரத்தில் கொல்லம்-புனலூர் இடையிலான சேவை இருமார்க்கங்களிலும் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. நெல்லை - பாலக்காடு பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் கொல்லம் வரை இயக்கப்படுகின்றன.

    திருவனந்தபுரம் கோட்டத்தில் கனமழை காரணமாக அங்கமாலி, ஆலுவா பாலங்களில் வெள்ள நீர் உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சோரனூர்- எர்ணாகுளம் பயணிகள் ரெயில் இன்று ரத்து செய்யப்படுகிறது.

    நேற்று புறப்பட்ட சென்னை - திருவனந்தபுரம் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், காரைக்கால் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பாலக்காடு வரை மட்டுமே செல்லும்.

    இதேபோல் இன்று புறப்படும் திருவனந்தபுரம் - சென்னை சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், எர்ணா குளம் - காரைக்கால் எக்ஸ்பிரஸ் பாலக்காடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    14-ந்தேதி புறப்பட்ட மும்பை - கன்னியாகுமரி ஜெயந்தி எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு, திண்டுக்கல், மதுரை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதேபோல் கே.எஸ்.ஆர். பெங்களூர் - கன்னியாகுமர் எக்ஸ்பிரஸ் சேலம், நாமக்கல், திண்டுக்கல், நெல்லை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது.

    ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். #Expresstrains #Flood

    ×