search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TMMK"

    • மாரியம்மாள் சங்குபட்டி பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார்.
    • அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவை அவர்கள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடத்தை அடுத்த சங்குபட்டியை சேர்ந்தவர் மாரியம்மாள்(வயது 42). இவர் சங்குபட்டி பகுதியில் ஓட்டல் நடத்தி வந்தார்.

    சிவகிரி அருகே உள்ள சரவணபுரத்தை சேர்ந்த இன்பராஜ், வேலு, கருப்பசாமி, சதீஷ்குமார் ஆகியோரிடம் மாரியம்மாளும், அவரது கணவர் அந்தோணி ராஜும் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் அவர்கள் 4 பேரும், தமிழக மக்கள் முன்னேற்ற கழக தென்காசி மாவட்ட செயலாளர் மாடசாமி தலைமையில் சம்பவத்தன்று மாரியம்மாளின் ஓட்டலுக்கு வந்துள்ளனர்.

    அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், ஒரு கட்டத்தில் ஓட்டலை சூறையாடியதோடு அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவை எடுத்து சென்றதாகவும், மாரியம்மாளை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் த.ம.மு.க. மாவட்ட செயலாளர் மாடசாமி உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் யாகூப் தலைமையில் நடைபெற்றது.
    • அரசு கலைக்கல்லூரி அருகில் மாவட்ட சட்டக்கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் யாகூப் தலைமையில் நடைபெற்றது.

    த.மு.மு.க மாவட்ட செயலாளர் முகமது பாசித், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் பஷீர்ஒலி, பொருளாளர் அப்துல்காதர், மாவட்ட துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான், மாவட்ட செயலாளர்கள் மஜீத், ஷேக், உமர்கத்தாப், அபுதாஹிர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் முகமது பஸ்லி நன்றி கூறினார்

    கூட்டத்தில் கடையநல்லூர் அரசு கலைக்கல்லூரி அருகில் மாவட்ட சட்டக்கல்லூரி, வேளாண்கல்லூரி மற்றும் சித்தா பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும். கடையநல்லூர் அட்டைகுளத்தில் உழவர் சந்தை அமைக்க வேண்டும், கொல்லம்- திருமங்கலம் நான்கு வழிச்சாலையை விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லாத வகையில் மாற்று வழியில் அமைக்க வேண்டும்.

    செங்கோட்டையில் இருந்து மும்பைக்கு வாராந்திர ரெயில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    ×