search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "threat murder"

    மந்தாரக்குப்பம் அருகே குடிபோதையில் தனியார் பஸ் கண்டக்டருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    நெய்வேலி:

    கடலூர் டி.என்.பாளையத்தை சேர்ந்தவர் சுந்தர மூர்த்தி (வயது 35). இவர் தனியார் பஸ்சில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். நேற்று மாலை கடலூரில் இருந்து விருத்தாசலம் சென்ற பஸ்சில் பணியாற்றி கொண்டிருந்தார். அந்த பஸ் வடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் என்ற இடத்தில் நின்றது.

    அப்போது விருத்தாசலம் காமராஜர் நகரை சேர்ந்த முருகன் (28) என்பவர் அந்த பஸ்சில் ஏறினார். அவரிடம் கண்டக்டர் சுந்தரமூர்த்தி டிக்கெட் கொடுத்து பணம் கேட்டார். அப்போது முருகன் பணம் கொடுக்க மறுத்து கொலை மிரட்டல் விடுத்தார். அப்போது முருகன் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து டிரைவர் பஸ்சை மந்தாரக்குப்பம் போலீஸ் நிலையத்துக்கு ஓட்டி சென்றார். பின்பு கண்டக்டர் சுந்தரமூர்த்தி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்த முருகனை கைது செய்தார்.

    பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மாணவி வீட்டுக்கு போலீசார் வந்து சோதனை நடத்தினார்கள். மேலும் அடியாட்கள் வந்து எங்களை மிரட்டுகிறார்கள் என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். #dharmapurigirlstudent

    கம்பைநல்லூர்:

    பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட மாணவி வீட்டுக்கு போலீசார் சென்று சோதனை நடத்தினார்கள். நேற்று இரவு இந்த சோதனை நடந்தது. 5 போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

    இது குறித்து மாணவியின் அண்ணன் முனீஸ்வரன் கூறியதாவது:-

    எங்கள் குடும்பத்தை அடிக்கடி மிரட்டுகிறார்கள். பகலிலும், இரவிலும் அடியாட்கள் வந்து மிரட்டுகிறார்கள். நீ வழக்கை எப்படி நடத்துவாய் என்று பார்க்கத்தான் போகிறோம் என்றும், நீ வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என்றும் மிரட்டி வருகிறார்கள்.


    கைதான சதீஷ்குமாரின் தாயார் நேரில் வந்து என் குடும்பத்தை மிரட்டினார். எனக்கு எல்லா மட்டத்திலும் ஆட்கள் இருக்கிறார்கள். இதனால் என் மகனை ஜாமீனில் எடுத்து வந்து விடுவேன் என்றும் மிரட்டுகிறார். அவரை போலீசார் கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவியின் தந்தை அண்ணாமலை கூறியதாவது:-

    எங்கள் வீட்டுக்கு போலீசார் வந்தார்கள். வீட்டில் சோதனை நடத்தி எதையோ தேடினார்கள். ஆனால் என்ன காரணத்திற்காக வந்தோம் என்பதை சொல்ல மறுத்து விட்டார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    என்னையும், என் கணவரையும் இடித்து தள்ளி விட்டு போலீசார் எங்கள் வீட்டுக்குள் வந்தனர். கொலை செய்யப்பட்ட என் மகளின் பாஸ் புத்தகத்தை கேட்டனர். நான் கொடுக்க முடியாது என்றேன். அவர்கள் என்னை இடித்து தள்ளினர். நான் கீழே விழுந்து விட்டேன். எங்களை அவர்கள் மிரட்டினார்கள். எங்களுக்கு பாதுகாப்பு இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவியின் உறவுக்கார பெண் ஒருவர் கூறியதாவது:-

    மாணவி கொலை செய்யப்பட்ட பிறகு எங்களுக்கு அடிக்கடி கொலை மிரட்டல் வருகிறது. எங்கள் குடும்பத்தினரை கஷ்டப்படுத்துகிறார்கள். மாணவியின் சாவுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் என்று நாங்கள் போராடி வருகிறோம். எங்களுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #dharmapurigirlstudent

    ×