என் மலர்

    நீங்கள் தேடியது "Thirumangalam mother kidnap"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே 3 குழந்தைகளின் தாய் கடத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள எஸ்.வெள்ளாகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, விவசாயி. இவரது மனைவி ஜெயா (வயது 32). இவர்களுக்கு ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர்.

    சுப்பிரமணியின் நண்பர் மருதுபாண்டி. இவர் அடிக்கடி வந்து சென்ற போது ஜெயாவுடன் பழக்கம் ஏற்பட்டது. இது கள்ளக்காதலாக மாறியது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஜெயா கட்டிட வேலைக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் தகவல் கிடைக்கவில்லை.

    இதுகுறித்து கள்ளிக்குடி போலீசில் சுப்பிரமணி புகார் செய்தார். அதில், தனது மனைவி கடத்தப்பட்டு உள்ளதாகவும் அவரை மீட்டுத்தர வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×