என் மலர்
நீங்கள் தேடியது "telangana Judge"
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஐகோர்ட்டு நீதிபதி நாயக் பாலயோகி. இவர் திடீரென்று நீதிபதி பதவியை ராஜினாமா செய்தார்.
அவரது பதவிகாலம் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ந்தேதி வரை உள்ளது. ஆனால் விருப்ப ஓய்வில் செல்வதாக கூறி ராஜினாமா செய்துள்ளார். அவர் வருகிற 15-ந்தேதி அலுவலகத்தில் இருந்து ஓய்வு பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜினாமா செய்துள்ள நீதிபதி பாலயோகி வருகிற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு செய்து இருக்கிறார். அவர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்கட்சி சார்பில் அமலாபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார். கிழக்கு கோதாவரி மாவட்டம் மும்மிடிவரத்தை சேர்ந்த பாலயோகி கூறும் போது, தான் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைமையுடன் தொடர்பு கொண்டு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவரிடம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் தேர்தலில் போட்டியிட சீட் தருவதாக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையே அமலாபுரம் தொகுதிக்கு சென்ற பாலயோகி அங்கே தனது ஆதரவாளர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். #Telanganajudge






