search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tasmark"

    • விழுப்புரத்தில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மதுபெட்டி ஒன்றுக்கு ரூ.5.50ல் இருந்து ரூ.8ஆகவும், பீர் பெட்டி ஒன்றுக்கு ரூ.4-ல் இருந்து ரூ.8ஆகவும்,வெளிநாட்டு மதுபான பெட்டி ஒன்றுக்கு ரூ.50-ல் இருந்து ரூ.60 ஆகவும் இறக்கு கூலி வழங்கிட கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம் :

    விழுப்புரத்தில் டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம்டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் சார்பில் மதுபெட்டி ஒன்றுக்கு ரூ.5.50ல் இருந்து ரூ.8ஆகவும், பீர் பெட்டி ஒன்றுக்கு ரூ.4-ல் இருந்து ரூ.8ஆகவும்,வெளிநாட்டு மதுபான பெட்டி ஒன்றுக்கு ரூ.50-ல் இருந்து ரூ.60 ஆகவும்இறக்கு கூலி வழங்கிட கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.வ்ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு மாவட்ட தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். டாஸ்மாக் குடோன் சுமைப்பணி தொழிலாளர்கள் தலைவர் மணிகண்டன் , செயலாளர் இளவரசன், கலை ஆகியோர் முன்னிலை வகித்தனார்.முன்னதாக ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் பழனி வரவேற்று பேசினார். முடிவில் மேஸ்திரி கலை நன்றி கூறினார்.

    • 4 ரோடு அருகே உள்ள டாஸ்மார்க் கடையில் குடிமகன்கள் அட்டகாசத்தால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
    • புதிய கடை வருவதற்கு அனுமதி அளிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் பழைய பைபாஸ் சாலையில் ஏற்கனவே 3 டாஸ்மாக் கடைகள் இயங்கி வரு கின்றது. அதில் 2 கடைகள் பார் வசதியுடன் உள்ளது. தற்போது பொத்தனூர் தண்ணீர் பந்தலில் இயங்கி வரும் கடையை அங்கிருந்து அகற்றி பரமத்தி வேலூர் பழைய பைபாஸ் சாலையில் கொண்டு வர டாஸ்மாக் நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.

    தண்ணீர் பந்தலில் பொதுமக்கள் எதிர்ப்பால் அந்த கடை தற்போது பரமத்தி வேலூர் மாற்றப்படுகிறது. ஏற்கனவே இதே பகுதியில் இருந்த டாஸ்மாக் கடை பொதுமக்களின் எதிர்ப்பால் அங்கிருந்து மாற்றப்பட்டது. மீண்டும் அதே இடத்திற்கு வேறொரு டாஸ்மார்க் கடை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

    ஏற்கனவே உள்ள 3 டாஸ்மாக் கடைகளில் சிவா தியேட்டர் அருகில் உள்ள கடையை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் புதியதாக ஒரு கடை வருவதால் குடிமகன்களின் நகரமாக பரமத்தி வேலூர் திகழும். ஏற்கனவே உள்ள சிவா தியேட்டர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையால் அரு கில் உள்ள குடியிருப்பு வாசிகள் பெரும் சிரமத்தி ற்கு உள்ளாகி வருகின்றனர்.

    தினசரி இப்பகுதியில் மது குடித்துவிட்டு வருவோரின் அட்டகாசம் அதிகரித்தே வருகின்றது. தினசரி மாலை வேளையில் 4 ரோடு அருகே உள்ள டாஸ்மார்க் கடையில் குடிமகன்கள் அட்டகாசத்தால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று

    வருகின்றனர். இந்நிலையில் நான்கு ரோடு அருகே மீண்டும் ஒரு டாஸ்மார்க் கடை வருவதை பொதுமக்கள் விரும்பவில்லை.

    நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மேலும் புதிய டாஸ்மார்க் கடை வருவதை தடுக்க வேண்டும். இருக்கின்ற 3கடைகளில் சிவா தியேட்டர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும். பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் டாஸ்மாக் நிர்வாகம் புதிய கடை அமைப்பதற்கு ஏற்பாடு செய்து வருவதால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் புதிய கடை வருவதற்கு அனுமதி அளிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×