என் மலர்
நீங்கள் தேடியது "பாதிப்பு"
- பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது.
- மழை காலங்களில் நெல்லை காயவைக்க முடியாமல் விவசாயிகளுக்கு பாதிப்பு நிலை ஏற்படுகிறது.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியம், சாலியமங்களம் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 2500 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.
இங்கு குறுவை, சம்பா மற்றும் கோடை விவசாயம் என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இங்கு விளைவிக்ககூடிய நெல்லை உலர்த்த உலர் களம் வசதி இல்லைஅரசு கொள்முதல் நிலையத்தில் போதுமான இடவசதியோ அல்லது களம் வசதியோ இல்லாததால் விவசாயிகள் அறுவடை செய்யும் நெல்லை அருகே உள்ள நெடுஞ்சாலையில் கொட்டி வைத்து தினசரி உலர்த்தி வருகின்றனர்.
நெடுஞ்சாலையில் நெல் உலர்த்துவதால்வாகன போக்குவரத்துக்கு இடையூறாக ஏற்படுவதோடு, நெல் உலர்த்தும் பணியில் ஈடுபடும் தொழிளாளர்களுக்கு உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இருந்து வருகிறது.
விவசாயிகளுக்கு நெல் உலர்த்த உலர் களம் அமைத்து தந்தால் பயன்உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சாலியமங்களம் பகுதியை சேர்ந்த விவசாயி கூறியதாவது:-
சாலியமங்களம் பகுதியில் 2500 ஏக்கருக்கும் மேலாக விவசாய நிலங்கள் உள்ளன இங்கு விளைய கூடிய நெல்லை காயவைக்க உலர் களம் இல்லைஅரசு கொள்முதல் நிலையத்திலும் நெல்லை காயவைக்க இடவசதி இல்லைநெல்லை நன்கு காயவைத்து எடுத்துசென்றால்தான் அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்யமுடியும் மழை காலங்களில் நெல்லை காயவைக்க முடியாமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை இருந்து வருகின்றனர்.
அதனால விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை நெடுஞ்சாலைகளில் கொட்டி காய வைக்க வேண்டி உள்ளது. வாகன போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தாலும் வேற வழியில்லை நெல்லை உலர்த்த அரசு களம் அமைத்து கொடுத்தால் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு கடுமையான இருமல், சளி இருப்பதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
- கிராமங்களில் சுகாதார ஊழியர்கள் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூர் ஒன்றியத்தில் மொத்தம் 55 ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவிவருகிறது. காய்ச்சல் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக பொன்னேரி, தடப்பெரும்பாக்கம், அத்திப்பட்டு அனுப்பம்பட்டு, பழவேற்காடு, வன்னிப்பாக்கம், தேவம்பட்டு, நந்தியம்பாக்கம், அண்ணாமலைசேரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் காணப்படுகிறது. அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களுக்கு கடுமையான இருமல், சளி இருப்பதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் மட்டும் 5 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். மேலும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் ரத்த மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து தடப்பெருக்பாக்கம் ஊராட்சி முழுவதும் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மூலம் கொசு மருந்து புகை அடிக்கப்பட்டு வீடுகளில் பொருட்களில் தண்ணீர் தேங்கியுள்ள இடம் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டன. மேலும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டு உள்ளது. காய்ச்சல் பாதித்த கிராமங்களில் சுகாதார ஊழியர்கள் முகாமிட்டு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து கிராமமக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக பெய்த மழையினால் வீடுகளில் கொசு உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது. தேங்கியுள்ள மழை நீரை அகற்றவும், கொசு மருந்து தெளிக்கவும் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






