search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tomato prices"

    நாமக்கல் மாவட்டத்தில் தக்காளி விலை கிலோ ரூ.100யை தொட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு,  ஒரு கிலோ தக்காளி ரூ.150 வரை அதிகரித்து விற்றது.  பின்னர் படிப்படியாக குறைந்து மீண்டும் 10 ரூபாய்க்கு வந்தது. விலை வீழ்ச்சியால் செடியில் பறிக்காமல் விடப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

    இந்நிலையில் தக்காளி விளைச்சல்  குறைவு காரணமாக சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. தேவை அதிகரித்துள்ள நிலையில் வரத்து காரணமாக விலை அதிகரித்துள்ளது. 

    தரமான ஒரு கிலோ தக்காளி பழம், தற்போதைய  நிலையில் சில்லரை மார்க்கெட்டில் 100 ரூபாயினை எட்டி உள்ளது. மொத்த மார்க்கெட்டிலேயே 80 ரூபாயினை கடந்து விட்டது. இரண்டாம் ரக தக்காளி கிலோ 85 ரூபாய் முதல் 90 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

    வைகாசி மாதம் பிறந்து விட்டதால் அத்தனை வகை காய்கறிகளின் தேவைகளும் அதிகரித்துள்ளன. இதனால் சராசரியாக எல்லா காய்கறிகளின் விலைகளும் கடந்த மாதத்தை விட இந்த மாதம் 5 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
    ×